ராமாயணம் குறித்து சர்ச்சை கருத்து – பிரகாஷ்ராஜ் மீது வழக்குப் பதிவு
Case Registered Against Actor Prakash Raj: பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் சமீபத்தில் ராமாயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னட சினிமாவில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் பிரகாஷ் ராஜ். தொடர்ந்து கன்னட மொழியில் படங்களில் நடித்து வந்த இவர் அடுத்தடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். அனைத்து மொழிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நடிகராக வலம் வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ் சினிமாவில் இவர் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. வில்லன் கதாப்பாத்திரம், பாசமிது தந்தை, சிறப்பு கதாப்பாத்திரம் என எதுவாக இருந்தாலும் அவருக்கு அது மாபெரும் வெற்றிப் பெறக் கூடியதாகவே உள்ளது. இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை நடிகர் பிரகாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இதுவரை 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஆளும் மத்திய அரசை விமர்சித்து பலமுறை வெளிப்படையாக பிரகாஷ் ராஜ் பேசி இருக்கிறார். அப்படி பேசுவதனால அவர் மீது வழக்குப் பதிவுகளும் செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் ராமாயணா குறித்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்ததால் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Also Read… Manu Anand: அஜித் சார் எப்போது அழைத்தாலும் படத்திற்கு தயார்.. இயக்குநர் மனு ஆனந்த் பகிர்ந்த விஷயம்!




ராமாயணா குறித்து சர்ச்சை பேச்சால் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப் பதிவு:
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது ராமாயணத்தை கிண்டலடிக்கும் விதமாக பேசியுள்ளார். மேலும் அதில் ராமர் மற்றும் லக்ஷ்மன் இருவரும் ராவணனின் தோட்டத்தில் பணம் கொடுக்காமல் பழங்களை எடுத்து சாப்பிட்டு விட்டதாக கிண்டலடித்து பேசியுள்ளார். மேலும் இதனை வடக்கு மற்றும் தெற்கிற்கு இடையேயான அரசியலை குறிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். ஆனால் இந்த ஒப்பீடு மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப் பதிவை செய்துள்ளனர்.
Also Read… ராமாயணா படத்தில் எனது ராவணன் கதாப்பத்திரம் இப்படிதான் இருக்கும் – நடிகர் யாஷ்