AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுதா?.. தனது திருமணத்திற்காக ஒரு ஷோவையே நடத்திய நடிகர் இவர்!

Tamil Actor Childhood Photos: சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகைகளின் சிறுவயது அடையாளம் தெரியாத புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருவது உண்டு. அந்த வகையில் இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர் என தெரியுமா?. அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுதா?.. தனது திருமணத்திற்காக ஒரு ஷோவையே நடத்திய நடிகர் இவர்!
பிரபல நடிகரின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 18 Apr 2026 08:34 AM IST

மேலே இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் கியூட் சிறுவன் இருக்கும் சிறுவன் எந்த நடிகர் என தெரிகிறதா?. இவர் ஆரம்பத்தில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கடந்த 2005ம் ஆண்டில் இயக்குநர் விஷ்ணுவர்தன் (Vishnuvardhan) என்பவரால் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பகால படங்களில் இவர் படங்களில் செகண்ட் ஹீரோ மற்றும் முக்கியமான வேடங்களில் படங்களில் நடித்துவந்தார். அந்த வகையில் இவர் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியிருந்தார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இவர் இயக்குநர் பாலா (Director Bala), பா.ரஞ்சித் (Pa.Ranjith), ஹரி (Hari) என இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ளார். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் இவர் கிட்டத்தட்ட 2 படங்களில் நடித்துள்ளார். அந்த இரு படங்களின் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது.

மேலும் இவர் கிட்டத்தட்ட தன்னை விடவும் 17 வயது குறைந்த நடிகையை திருமணம் செய்திருந்தார். இதற்கு முன் தனது திருமண வரனுக்காக ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியையே நடத்தியிருந்தார். இப்போது இந்த நடிகர் யார் என தெரிந்திருக்கும். இந்த சிறுவன் வேறுயாருமில்லை நடிகர் ஆர்யாதான் (Actor Arya).

இதையும் படிங்க: இவருக்கு 60 வயசுனு சொன்னா யாராச்சும் நம்புவாங்களா? பிறந்த நாளில் வீடியோ வெளியிட்ட விக்ரம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் ஆர்யா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Arya (@aryaoffl)

நடிகர் ஆர்யா கடந்துவந்த சினிமா பாதை:

நடிகர் ஆர்யா தனது ஆரம்பகாலத்தில் படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான. இதை தெடர்ந்து இவருக்கு கலாப காதலன், பட்டியல், நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற ஹிட் படங்களை கொடுத்திருந்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கிலும் படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார்.

இதையும் படிங்க: சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே… 11 ஆண்டுகளை நிறைவு செய்தது ஓ காதல் கண்மணி படம்!

நடிகர் ஆர்யா வெறும் நடிகராக மட்டுமில்லாமல், விளையாட்டு மற்றும் சைக்கிளிங்கில் ஆர்வம் அதிகம். மேலும் இவர் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். இவர் தற்போது இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் என்ற படத்தில் நடித்துவருகிறார். மேலும் சார்பட்டா 2 படத்திலும் நடிக்கவுள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக மிஸ்டர் எக்ஸ் என படமானது திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us