AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Yash: தந்தை – மகன் பழிவாங்கும் கதை.. டாக்ஸிக் படம் இப்படித்தான் இருக்கும் – யாஷ் சொன்ன விஷயம்!

Yash Toxic Movie Plot: கன்னட சினிமாவில் பிரபலமான நடிகர், தயாரிப்பாளராக இருந்துவருபவர் யாஷ். இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்ட படமாக இந்த 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் டாக்ஸிக். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த யாஷ், இப்படத்தின் மைய கதை எதை பற்றி இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார்.

Yash: தந்தை – மகன் பழிவாங்கும் கதை.. டாக்ஸிக் படம் இப்படித்தான் இருக்கும் – யாஷ் சொன்ன விஷயம்!
யாஷ் டாக்ஸிக் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Apr 2026 21:23 PM IST

பான் இந்திய பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் யாஷ் (Yash). இவர் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான கேஜிஎஃப் (KGF) என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய அளவிலும் பிரபலமானார். ஆரம்பத்தில் சாதாரண சீரியல் நடிகராக இருந்த இவர், கன்னட சினிமாவில் ஹீரோவாக நுழைந்து, தற்போது பான் இந்திய ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக வளர்ந்துள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. அந்த படங்களின் வரிசையில் மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம்தான் டாக்ஸிக் : எ ஃபேரி டைல் ஃபார் க்ரோன் அப்ஸ் (Toxic: A Fairy Tale for Grown Ups).

இந்த படத்தை பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்க, யாஷும் இணைந்து கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் யாஷுடன் நடிகர்கள் நயன்தாரா (Nayanthara), கியாரா அத்வானி (Kiara Advani), ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் டோவினோ தமாஷ் என பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் யாஷ் கலந்துகொண்டிருந்தனர். அதில் அவர் டாக்ஸிக் படத்தின் மைய கதை குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தனுஷின் டி55 படத்தின் இசையமைப்பில் தீவிரமாக இறங்கிய சாய் அபயங்கர் – வைரலாகும் பதிவு!

டாக்ஸிக் திரைப்படத்தின் மைய கதைக்களம் குறித்து பேசிய யாஷ் :

நடிகர் யாஷ் அந்த நேர்காணலில் பேசுகையில், “ராமாயணா படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான திரைப்படம் டாக்ஸிக். இந்த படம் முழுக்க வைப்பாக இருக்கும். இந்த படமானது தந்தை மற்றும் மகனின் பழிவாங்கும் கதையை மையமாக கொண்டது. மேலும் இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றது, ஆனால் கோவா என்ற இடம் 1961 வரை போர்ச்சுகீசியர்கள் ஆட்சியில் இருந்தது.

இதையும் படிங்க: அப்படி போடு போடு போடு… 22 ஆண்டுகளை கடந்த தளபதி விஜய் – திரிஷாவின் கில்லி திரைப்படம்!

அதை மையப்படுத்தியும் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. ஆக மொத்தத்தில் இந்த படமானது முழுக்க ஒரு கேங்ஸ்டர்ஸ் திரைப்படமாக இருக்கும், மேலும் இதில் சுவாரஸ்யமான கத்பாத்திரங்களும் உள்ளது. ரசிகர்களுக்கு பிடித்த காட்சிகளும் உள்ளது” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

டாக்ஸிக் திரைப்படம் குறித்து நடிகர் யாஷ் பேசிய வீடியோ பதிவு:

இந்த டாக்ஸிக் படமானது கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகவேண்டியது. பின் சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படமானது வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் உள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் மற்றும் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us