AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள்… வாழ்த்து மழை பொழியும் பிரபலங்களும் ரசிகர்களும்!

Isaignani Ilaiyaraaja Birthday | பான் இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் கொண்டாடப்படும் பல இசைகளுக்கு சொந்தக்காரரான இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள்… வாழ்த்து மழை பொழியும் பிரபலங்களும் ரசிகர்களும்!
இசைஞானி இளையராஜாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jun 2026 12:14 PM IST

தமிழ் சினிமாவில் அன்னக்கிளி என்ற படத்தில் இசையமைத்ததன் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இளையராஜா. இவரது இசையில் தொடர்ந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அதிக அளவில் தமிழ் சினிமாவில் பாடல்களை இசையமைத்து வந்த இளையராஜா பிறகு பான் இந்திய மொழிகளிலும் படங்களுக்கு இசையமைத்து வந்தார். இளையராஜாவின் இசையில் தான் தங்களது படங்களுக்கு பாடல்கள் வேண்டும் என்று முன்பு இருந்த பிரபல நடிகர்கள் வரிசைக்கட்டி காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருந்த நிலையில் தற்போது 1500 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜாவை மக்கள் இசைஞானி என்று அன்புடன் அழைத்து வருகின்றது. இவரது இசையில் வெளியாகும் படங்களில் நடிப்பதே பெரிய பாக்கியம் என்று கருதுகின்றனர் நடிகர்கள்.

இசைத் துறையில் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் அவரது பாடல்கள் வந்து பல ஆண்டுகளுக்கு பிறந்தவர்கள் கூட ரசிக்கும் வகையில் இருப்பதே அவரது சிறப்பு ஆகும். இளையராஜா இசையில் வெளியான பாடலில் உள்ள ‘புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே’ வரிகளைப் போல அவரது ரசிகர்களுக்கு கடவுளாகவே இருக்கிறார் இசைஞானி இளையராஜா. இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜாவிற்கு பொழியும் பிறந்தநாள் வாழ்த்து மழை:

இளையராஜாவின் உண்மையான பிறந்த தேதி என்பது ஜூன் மாதம் 3 தான். அன்றைய நாள் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளும் கூட. அன்று கலைஞரை மட்டுமே மக்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக தனது பிறந்த நாளை முந்தைய நாளான 2-ம் தேதி கொண்டாட இளையராஜா முடிவு செய்ததாக வட்டாரங்களில் பேச்சு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று 02-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு இளையராஜா தனது 83-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்கு நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் பலர் நேரில் வந்து இளையராஜாவிற்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரபலங்கள் பலர் நேரில் வந்தும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தின் மூலமாகவும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்கு இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அந்த தருணம் நிகழ்ந்துவிட்டது… வெளியானது மாரி செல்வராஜின் மஞ்சணத்தி பட அப்டேட்

இசைஞானி இளையராஜா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நண்பன் படத்தில் அந்த சின்ன வேடத்தில் நடிக்க இதுதான் காரணம் – பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஓபன் டாக்

Follow Us