AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் பட இயக்குநரை நேரில் சந்தித்த ஜேசன் சஞ்சய் – வைரலாகும் வீடியோ!

Jason Sanjay And H Vinoth Meet: தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக அறிமுகமாகியிருப்பவர் ஜேசன் சஞ்சய். இவர் முதல்வர் விஜய்யின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் ஜன நாயகன் பட இயக்குநர் எச். வினோத்தை சந்தித்தது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஜன நாயகன் பட இயக்குநரை நேரில் சந்தித்த ஜேசன் சஞ்சய் – வைரலாகும் வீடியோ!
ஜேசன் சஞ்சய் மற்றும் எச் வினோத் சந்திப்புImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 26 Jul 2026 10:49 AM IST

முதல்வர் விஜய்யின் *CM Vijay) மூத்த மகன்தான் ஜேசன் சஞ்சய் (Jason Sanjay). இவர் தனது சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட இவர், தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சிக்மா (Sigma) படத்தை இவரே இயக்கியுள்ளார். இவர் தனது கல்லூரி படிப்பை வெளிநாடுகளில் படித்த நிலையில், இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள படம் சிக்மா. இதில் சந்தீப் கிஷன் (Sundeep Kishan) மற்றும் ஃபரியா அப்துல்லா (Faria Abdullah) இணைந்து நடித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படமானது, சிறப்பான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

ஆரம்பத்தில் இப்படமானது ஜூலை 31ம் தேதியில் வெளியாகவும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜன நாயகன் (Jana Nayagan) பட வெளியீட்டால் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் இயக்குநர் ஜேசன் சஞ்சய், இயக்குநர் எச்.வினோத் (H Vinoth) சந்தித்து பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் ஸ்ரீ ஸ்ரீ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

இணையத்தில் வைரலாகும் எச் வினோத் மற்றும் ஜேசன் சஞ்சய் சந்தித்தது தொடர்பான வீடியோ பதிவு:

இந்த வீடியோவில் ஜேசன் சஞ்சய் மற்றும் இயக்குநர் எச் வினோத் சந்தித்து பேசுவதுபோல இருக்கிறது. இந்த வீடியோவானது, இயக்குநர் சங்கரின் மகன் அர்ஜித் சங்கரின் புது படமான லவர் பாய் பட ஷூட்டிங் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ என தெரிகிறது. அர்ஜித் சங்கர் மற்றும் கிரித்தி ஷெட்டி இணைந்து நடித்துவரும் லவ்வர் பாய் படத்தின் ஷூட்டிங்கில், எச் வினோத், ஜேசன் சஞ்சய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அது உங்களுக்கு கட்டாயம் தெரிந்துவிடும் – இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்:

ஜேசன் சஞ்சய் மற்றும் சந்தீப் கிஷன் கூட்டணியில் உருவாகியிருக்கும் சிக்மா படமானது, அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்க இசையமைப்பாளர் தமன் இசையமைத்துவருகிறார். இப்படத்திலிருந்து சிக்மா ஸ்டைல் என்ற ஒரே பாடல் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் ஜூலை 31ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜன நாயகன் பட வெளியீட்டால் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போகும் என வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us