Suriya: சூர்யா அரசியல் வருகிறாரா..? அதிரடியாக நற்பணி மன்றம் கொடுத்த விளக்கம்!
Suriya Fan Club Statement: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் சூர்யா. சமீபத்தில் இவர் அரசியல் வரவுள்ளதாக ரசிகர்க் ஒருவர் விழாவில் பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அகில இந்திய சூர்யா நற்பணிமன்றம் விளக்கம் கொடுத்துள்ளது.
கோலிவுட் மக்கள் மத்தியில் மனதிற்கு மிகவும் நெருக்கமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. நடிகராக மட்டுமல்லாமல் சூர்யா, ஏழை எளிய மாணவர்களுக்கான அறக்கட்டளையையும் வைத்து நடத்திவருகிறார். அதனால் தமிழக மக்கள் மத்தியில் இவருக்கு ஒரு பெரிய மரியாதை கூறலாம். அந்த வகையில் இவர் தற்போது படங்களில் நடித்துவருவதற்கு ஆர்வம் காட்டிவருகிறார். மேலும் இவர் இறுதியாக நடித்த கருப்பு (Karuppu) படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், அவர் அரசியல்வாதியாக நடித்திருந்தார்.
இது அவரின் ரசிகர்கள் மத்தியில், ஒருவேளை சூர்யா அரசியல் வருகிறாரா? என்ற எண்ணத்தை விதைத்தது. மேலும் சமீபத்தில் ரசிகர்கள் மன்ற கூட்டத்தில் இரா வீரமணி என்பவர் (நற்பணிமன்ற முன்னாள் நிர்வாகி) சூர்யா அரசியல் வருவதுபோல பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அகில இந்திய சூர்யா நற்பணிமன்றம் ஒரு விளக்க பதிவை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: சூர்யா – டி.ஜே.ஞனவேல் படத்தை உறுதி செய்தது தயாரிப்பு நிறுவனம்
அகில இந்திய சூர்யா நற்பணிமன்றம் விளக்கம் கொடுத்து வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Actor #Suriya is not interested in politics……👀 pic.twitter.com/ku7bWlVMDo
— Movie Tamil (@_MovieTamil) June 29, 2026
இந்த பதிவில், “கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியில் நடந்த ரசிகர்கள் மன்ற கூட்டத்தில், இரா.வீரமணி என்பவர் “இது எனது தனிப்பட்ட கருத்து” என்று தெரிவித்த பிறகே, சூர்யாவின் அரசியல் வருகை இவ்வாறு இருந்தாலே நன்றாக இருக்கும் என்பதுபோல பேசியிருந்தார். மேலும் மேடையில் பேசிய இரா வீரமணி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் நிர்வாகி பதிவியிலும் இல்லை.
இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் – ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்
மேலும் சூர்யா அவர்களுக்கு அரசியல் வரவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. அறக்கட்டளை மற்றும் ரசிகர்கள் மன்றத்தின் மூலமாக பொதுசேவையை மக்களுக்காக செய்துவருகிறார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூர்யாவின் அரசியல் வருகை குறித்து எதிர்பார்ப்புகள்:
தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து, தற்போது முதலமைச்சராக ரசிகர்களாலும், தொண்டர்களால் உயர்த்தப்பட்டவர் தளபதி விஜய். இவரின் நெருங்கிய நண்பர்தான் சூர்யா. தற்போது அவரும் அரசியல் வருவதாக சமீபத்தில் தகவல் பரவிவந்த நிலையில், இவர்கள் இருவரும் அரசியலில் இணைந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை ஊடக பக்கங்களில் வெளியிட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதை சூர்யாவின் நற்பணிமன்றம் இல்லை என்பதை உறுதியாக விளக்கியுள்ளது.