AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Bhagyashri Borse: நான் நைஜீரியாவில் படிக்கும்போது.. அதற்காக கேலிசெய்யப்பட்டேன் – ஓபனாக பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ்!

Bhagyashri Borse About College Life: தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக தொடர்ந்து நடித்து வருபவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் தமிழில் காந்தா என்ற படத்தின் மூலம் பிரபலமான நிலையில், சிவகார்த்திகேயனின் சேயோன் படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், கல்லூரி படிப்பு காலத்தில் கிண்டல் செய்யப்பட்டது குறித்து மனம் திறந்துள்ளார்.

Bhagyashri Borse: நான் நைஜீரியாவில் படிக்கும்போது.. அதற்காக கேலிசெய்யப்பட்டேன் – ஓபனாக பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ்!
பாக்யஸ்ரீ போர்ஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Jun 2026 17:37 PM IST

தெலுங்கு சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse). இவர் தெலுங்கு, தமிழ் போன்ற இரு மொழி திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார். இவர் கடந்த 2025ம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட காந்தா (Kandha) படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் அவர் நடிகர் துல்கர் சல்மானுக்கு (Dulquer Salmaan) ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். இதையடுத்து தெலுங்கில் லெனின் (Lenin) என்ற படத்திலும் நாயகியாக நடித்துவந்தார். இப்படத்தில் அவர் நடிகர் அகில் அக்கினேனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தற்போது இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

அதனை முன்னிட்டு இப்படத்தின் புரோமோஷன் பணிகளானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், கல்லூரி காலகட்டத்தில் தான் கிண்டல் செய்யப்பட்டது பற்றி ஓபனாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வாரணாசி படத்தில் அதையெல்லாம் அனுபவிப்பீர்கள்.. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி சொன்ன விஷயம்!

கல்லூரி காலங்களில் கிண்டல் செய்யப்பட்ட்து பற்றி வெளிப்படையாக பாக்யஸ்ரீ போர்ஸ் சொன்ன விஷயம்:

லெனின் படத்தின் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பாக்யஸ்ரீ போர்ஸ், அதில் “நைஜீரியாவில் தான் படிக்கும்போது, தனது ஆங்கில உச்சரிப்பின் காரணமாக வகுப்பில் உள்ள சக மாணவர்களால் கிண்டல் செய்யப்பட்டேன். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. இதனால தற்போது எனது எண்ணமமும், மனமும் எதையும் செய்யமுடியும் என்ற வைராக்கியத்தை கொண்டுள்ளது” என அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

சேயோன் திரைப்படத்தில் இணைவது குறித்து நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் வெளியிட்ட பதிவு:

காந்தா படத்தை அடுத்ததாக நேரடியாக தமிழில் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கும் படம்தான் சேயோன். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். மேலும் இதில் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், விறுவிறுப்பாக அடுத்தகட்ட பணிகள் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் லுக் வெளியாகல.. டைட்டில் ரிலீஸ் பண்ணல.. ஆனால் – சூர்யா47 குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்!

இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்ட நிலையில், அந்த மாதத்தில் ஜெயிலர் 2 போன்ற பிரம்மாண்ட படங்கள் வெளியாகிறது. அதனால் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் தள்ளிவைக்க திட்டமிடப்பட்டுவருகிறதாம்.

Follow Us