Suriya47: ஃபர்ஸ்ட் லுக் வெளியாகல.. டைட்டில் ரிலீஸ் பண்ணல.. ஆனால் – சூர்யா47 குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்!
Jithu Madhavan About Suriya47: மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க, சூர்யா நடித்துவரும் புது திரைப்படம்தான் சூர்யா47. இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜித்து மாதவன், சூர்யா47 படம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் பல படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இந்நிலையில் இவர் முழுக்க முழுக்க மலையாள சினிமாவில் இறங்கிய புது படம்தான் சூர்யா47 (Suriya47). இதை ஆவேஷம் பட இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்க, சூர்யாவின் புது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துவருகிறது. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) நடித்துவருகிறார். இந்த ஜோடியானது ஏற்கனவே புறநானூறு என்ற படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. பின் அந்த படமும் கைவிடப்பட்டது. இதையடுத்ததாக மீண்டும் சூர்யா47 படத்தின் மூலம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சூர்யா ஆக்ஷன் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார்.
அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்துவருகிறது. மேலும் இயக்குநர் ஜித்து மாதவனின் எழுத்தில் வெளியான படம் பாலன். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சூர்யா47 படம் ஒரு கூலான படம் என்பது போல தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: சூர்யா 47 படத்தில் ஷூட்டிங் நிறைவடைந்ததா? – இணையத்தில் வைரலாகும் பதிவு!
சூர்யா47 திரைப்படம் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குனர் ஜித்து மாதவன்:
அந்த நேர்காணலில் பேசுகையில், “சூர்யா47 படத்தை மக்களுக்கு எப்படி வழங்கப்போகிறோம் என இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. நாங்கள் இதுவரை ஃபர்ஸ்ட் லுக் வெளியிடவில்லை, டைட்டில் கூட வெளியிடவில்லை. நேரம் வரும்போது அதை நாங்கள் செய்வோம். இப்படத்தின் ஷூட்டிங்கின்போது நாங்கள் எதுவும் அழுத்தத்தை எடுத்துக்கொள்ளவில்லை.
இதையும் படிங்க: வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் மா இண்டி பங்காரம் படம் – இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா
ஒரு குழுவாக, நாங்கள் அழுத்தம் மற்றும் எதையும் பற்றியும் பேசியதில்லை. நாங்கள் கதைக்களத்தை பற்றி கவலை படமாக எங்களின் கதைக்கான வேலையை செய்துகொண்டிருக்கிறோம் என அதில் அவர் கூறியுள்ளார். மேலும் சூர்யா47 படம் ஒரு கூலான படமாக இருக்கும்” என்பதுபோல அவர் அதில் கூறியுள்ளார்.
சூர்யா47 படம் பற்றி இயக்குநர் ஜித்து மாதவன் பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:
#JithuMadhavan about #Suriya47:
• We have not decided yet how to present our movie to the people.. We haven’t released a First Look.. We did not even let out the title.. When the time comes, I’ll explain..
• I don’t take pressure.. as a team, we do not talk about the pressure… pic.twitter.com/tmie9jx8OV
— Laxmi Kanth (@iammoviebuff007) June 28, 2026
சூர்யா47 படமானது இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகளில் இருந்துவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்த 2026ம் ஆண்டு தீபாவளி அல்லது 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிபிடத்தக்கது.