AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jailer 2 : விருந்து தயார்.. ஜெயிலர் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Jailer 2 Movie First Single: பான் இந்திய சினிமாவில் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டுவருபவர் ரஜினிகாந்த். இவர் தனது 172வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்துள்ளார் அதுதான் ஜெயிலர் 2. தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

Jailer 2 : விருந்து தயார்.. ஜெயிலர் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Aug 2026 18:31 PM IST

இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) இணைந்திருக்கும் 172வது திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இப்படம் 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் (Jailer ) படத்தின் தொடர்ச்சியாக இந்த ஜெயிலர் 2 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகர்கள் விநாயகன், வசந்த் ரவி, மிர்னா மேனபின், யோகி பாபு மற்றும் பல்வேறு பான் இந்திய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ள நிலையில், முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது ஜெயிலர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நடிகராக எனது தந்தையின் அந்த படங்கள் எனக்கு ஊக்கமளிக்கும் – துருவ் விக்ரம் ஓபன் டாக்

ஜெயிலர் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

அனிருத்தின் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் 2 பட முதல் பாடலானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த பாடலின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா?:

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமானது மிகவும் பிரம்மாண்டமான கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில்தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பான் இந்திய சினிமா நடிகர்களும் இணைந்து நடிக்கிறாராம். மேலும் விஜய் சேதுபதி இதில் கேமியோ வேடத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: தன் மீதான விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ்

ரஜினிகாந்தின் நடிப்பில், 2026ம் ஆண்டில் வெளியாகும் முதல் படமாக இது அமையும் நிலையில், அவருக்கு பிரம்மாண்ட வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படத்தின் ரிலீஸில் சில மாற்றங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us