தள்ளிப்போகிறதா ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ்? அப்டேட் என்ன
Jailer 2 movie release update | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்த ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தொடர்பான செய்தி தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. கடந்த 2025-ம் ஆண்டில் வெளியான இந்த கூலி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு ஆண்டை நிறைவு செய்த நிலையில் அடுத்தடுத்து படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் முடிவடைந்து வெளியீட்டிற்கான பணிகள் நடைப்பெற்று வருகின்றது. அதனைத் தொடர்ந்து தர்மன் படத்தின் படப்பிடிப்பில் தற்போது ரஜினிகாந்த் தீவிரமாக நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.
தொடர்ந்து 75 வயதைக் கடந்தும் தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.




தள்ளிப்போகிறதா ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ்?
படத்தின் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முன்பே வெளியகி இருந்தாலும் அவ்வபோது படம் தொடர்பான தகவல் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. அதன்படி அக்டோபர் 15-ஆம் தேதியிலிருந்து ஜெயிலர் 2 படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையில்லை. எங்கள் தகவல்களின்படி, இப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் (post-production) முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 15 அன்று ஜெயிலர் 2 மூலம் இதுவரை கண்டிராத ஒரு திரையரங்கு அனுபவத்தைக் காணத் தயாராகுங்கள்.
Also Read… மம்முட்டி எனக்கு கொடுத்த அங்கீகாரம்… இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The news circulating on social media about #Jailer2 being postponed from October 15 is not true.
According to our sources, The film’s post-production work is progressing at full speed.
Get ready to witness a never-before-seen theatrical experience with Jailer 2 on October… pic.twitter.com/L7VFaXzh6s
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) August 18, 2026
Also Read… 10 ஆண்டுகளுக்கு முந்தைய ராஷ்மிகாவின் கமெண்ட்… தற்போது பதிலளித்த யாஷ்!