தன் மீதான விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ்
Director Lokesh Kanagaraj Inteview | தமிழ் சினிமாவில் இயக்குநராக வலம் வந்து தற்போது நாயகனாகவும் நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவரது சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தன் மீதான ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெறும் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான டிசி படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படம் கடந்த 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போதும் ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தின் வெற்றி ஒரு பக்கம் லோகேஷ் கனகராஜிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் மற்றொரு பக்கம் அவரது அடுத்தப் படத்திற்காக பிசியாக பணியாற்றி வருகின்றார்.
மேலும் தனது இயக்கத்தில் வெளியாகும் படத்தின் பணிகளில் பிசியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அவ்வபோது பேட்டிகளிலும் கலந்துகொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் தன் மீது வரும் ட்ரோல்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தன் மீதான விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ்:
என் அம்மாவே அந்த ட்ரோல்களை எனக்கு அனுப்புகிறார். இதில் பதற்றமடைய என்ன இருக்கிறது? நம்முடைய வேலை சிறப்பாக இருந்தால் மக்கள் நம்மைப் பாராட்டுவார்கள். ஆனால் ஏதேனும் தவறு இருந்தால், நாம் ட்ரோல் செய்யப்படுவோம். எனது முந்தைய இரண்டு படங்களான லியோ மற்றும் கூலி ஆகியவற்றில் சில குறைகள் இருந்தன, அதனால் அப்படிப்பட்ட சூழல் உருவானது. அதனால்தான் இப்போது நிறைய ட்ரோல்கள் வருகின்றன. நான் அல்லு அர்ஜுனுடன் ‘AA23’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன், அதன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படம் வெளியாகும் போது, இந்த ட்ரோல்கள் தானாகவே நின்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#LokeshKanagaraj about the trolls aimed at him to #DC co-actor:
Q: Sir, trolls like these are coming your way. How do you handle them?
Loki: “Even my mother sends me those trolls, da! What’s there to get tensed about? If our work is good, they’ll celebrate us. But if there’s a… pic.twitter.com/rN128JaUuS
— Movies Singapore (@MoviesSingapore) August 17, 2026
Also Read… கால்பந்து விளையாட்டில் சாதனைப்படைத்த அஜித் குமாரின் மகன் – வைரலாகும் ஷாலினி அஜித் பதிவு