AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர் தோல்விகள்… புது படத்தின் பணியை தொடங்கிய இயக்குநர் சிறுத்தை சிவா

Director Siruthai Siva next movie update | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சிறுத்தை சிவா. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தொடர் தோல்விகள்… புது படத்தின் பணியை தொடங்கிய இயக்குநர் சிறுத்தை சிவா
சிறுத்தை சிவாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Aug 2026 18:42 PM IST

சினிமாவில் ஒளிபதிவாளராக தனது பணியைத் தொடங்கி தற்போது இயக்குநராகவும், பாடலாசியராகவும் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் இயக்குநர் சிறுத்தை சிவா. இவர் மலையாள சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஒளிபதிவாளராக தனது பணியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஒளிபதிவாளராக படங்களில் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் சௌர்யம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். பிறகு கடந்த 2011-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் சிறுத்தை என்ற படத்தை நடிகர் கார்த்தியை வைத்து இயக்கி இருந்தார். இதுதான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன காரணத்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை சிறுத்தை சிவா என்று அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா அதிக அளவில் தமிழ் சினிமாவில் படங்களை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்தாலும் இவர் மக்களிடையே பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்க உள்ள அடுத்தப் படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

புது படத்தின் பணியை தொடங்கிய இயக்குநர் சிறுத்தை சிவா:

‘அண்ணாத்த’ மற்றும் ‘கங்குவா’ ஆகிய படங்களின் தொடர் பின்னடைவுகளுக்குப் பிறகு, இயக்குனர் சிறுத்தை சிவா தனது அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தை ஒரு கட்டுப்படியான பட்ஜெட்டில் தயாரிக்க ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. சுவாரஸ்யமாக, இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சுவாமியை அந்தத் தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது. அதே வேளையில், அஜித் குமார் மற்றும் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களும் சிறுத்தை சிவாவுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read… மலையாள சினிமாவில் ரசிகர்களும் பிரபலங்களும் கொண்டாடிய பாலன் தி பாய் படம் எப்படி இருக்கு? ஓடிடி விமர்சனம் இதோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Can I kiss you..? குட்டி ரசிகர்களுக்கு முத்தமிட்ட அஜித் குமார் – வைரலாகும் வீடியோ பதிவு!

Follow Us