AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சின்னத்திரையில் ஏ.ஆர்.ரஹ்மான்.. இசை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்பு – வைரலாகும் புரோமோ வீடியோ!

A.R. Rahman to Judge In TV Show: பான் இந்திய சினிமாவில் இசைப்புயல் என அனைவராலும் அழைக்கப்பட்டுவருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் இசையமைப்பில் படங்கள் குறைவாக உருவாக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்கிறார். அதன் புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சின்னத்திரையில் ஏ.ஆர்.ரஹ்மான்.. இசை நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்பு  – வைரலாகும் புரோமோ வீடியோ!
ஏ.ஆர்.ரஹ்மான்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 18 Aug 2026 19:48 PM IST

இந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவரும் இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான் (AR.Rahman). இவரின் இசையில் பல பான் இந்திய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் இசையில் ஷாருக்கான் (Shah Rukh Khan) முதல் முதலமைச்சர் விஜய் (CM VIjay)உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இறுதியாக வெளியான திரைப்படம் பெத்தி (Peddi). இயக்குநர் புச்சு பாபா சனாவின் இயக்கத்தில், ராம் சரண் இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த நிலையில், படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் குறைவான படங்களுக்கே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். இவரின் இசையில் பாலிவுட்டில் ராமாயணா 1 (Ramayana 1&2) மற்றும் ராமாயணா 2 போன்ற படங்களும், எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் (Killer) மற்றும் பிரபு தேவாவின் மூன் வாக் போன்ற படங்களில் பணியாற்றிவருகிறார்.

இந்த படங்கள் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், அவர் தற்போது சின்னத்திரை இசை நிகழ்ச்சி ஒன்றின் நடுவராக களமிறங்குகிறாராம். அது தொடர்பான அறிவிப்பு ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அப்போ நிவின் பாலி யாருனு தெரியாது? உண்மையை உடைத்த சாய் பல்லவி!

இசை நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரையில் எந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடுவராக பணியாற்றியதில்லை. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தாரே தவிர, நடுவராக பணியாற்றியதில்லை. ஆனால் தற்போது தமிழில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள சோனி விழா என்ற சேனனில் நடக்கவுள்ள சோனி ஐடோல் என்ற இசை நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றவுள்ளாராம். இதன் புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: என் வாழ்க்கையில் நான் இழந்த மிகப்பெரிய பகுதி.. முதல்வர் விஜய் குறித்து எமோஷனலாக பேசிய சாய் அபயங்கர்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடுவராக பணியாற்றும் புது நிகழ்ச்சியின் புரோமோ பதிவு:

ஏ.ஆர்.ரஹ்மான், சோனி விழா என்ற புது சேனலின் இசை நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றவுள்ளாராம். இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தினம் எப்போது என அறிவிப்புகள் இல்லை. விரைவில் இதன் ஒளிபரப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us