Shandhanu Bhagyaraj: என் உயிர் வரை நீடிக்கும் நன்றி.. முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவை வெளியிட்ட சாந்தனு பாக்யராஜ்!
Shandhanu Bhagyaraj Thanks To TN CM Vijay: கடந்த 2026ம் ஆண்டில் ஜூன் 27ம் தேதியில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பினால் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். மேலும் அரசு மரியாதையும் வழங்கியிருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சாந்தனு எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குநராகவும், நடிகராகவும் கே பாக்கியராஜ் (K. Bhagyaraj). இவர் கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 2ம் தேதியில் மாரடைப்பின் காரணமாக காலமானார். தனது 73வது வயத்தில் காலமான நிலையில், அவரின் இறப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தனர். இவரின் மகனாகவும், திரையுலகில் நடிகராகவும் இருந்துவருபவர் சாந்தனு பாக்யராஜ் (Shanthnu Bhagyaraj). இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் முதல்வரும், தளபதி விஜய்யின் (CM Thalapathy Vijay) தீவிர ரசிகரும் கூட. சாந்தனு மற்றும் கீர்த்தியின் கல்யாணத்துக்கும் முதல்வர் விஜய்தான் தாலி எடுத்து கொடுத்திருந்தார். கடந்த 2026ம் ஆண்டில் ஜூன் 27ம் தேதியில் காலமானார். இவரின் மறைவிற்கு முதல்வர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருந்தார். மேலும் கே பாக்யராஜின் இறுதிச்சடங்கிற்கு அரசு மரியாதையும் வழங்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 28ம் தேதியில், பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றிருந்தது. அங்கு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நடைபெற்றிருந்தது. இதற்காக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து, சாந்தனு பாக்யராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: சூர்யா அரசியல் வருகிறாரா..? அதிரடியாக நற்பணி மன்றம் கொடுத்த விளக்கம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து சாந்தனு பாக்யராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை… pic.twitter.com/g3l824pm4T— Shanthnu (@imKBRshanthnu) June 29, 2026
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது. என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை. அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு பாராட்டுவிழா.. தமிழ் திரையுலகம் போட்ட திட்டம்!
அரசு மரியாதை, மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம் என முதல்வர் விஜய்யின் அஞ்சலி மற்றும் அரசு வழங்கியதற்கு அவர் நன்றி தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியிருந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.