AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

K Bhagyaraj: 72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட பாக்யராஜின் உடல்!

K. Bhagyaraj Demise: கோலிவுட் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கே பாக்யராஜ். இவர் மாரடைப்பின் காரணமாக நேற்று (27/06/2026) காலமானார். இன்று (28/06/2026) அவரின் உடல் அரசு மரியாதையுடன் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

K Bhagyaraj: 72 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட பாக்யராஜின் உடல்!
இயக்குநர் கே. பாக்யராஜ் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 28 Jun 2026 14:35 PM IST

இயக்குநர் இமையம் பாரதிராஜாவின் (Bharathiraja) உதவி இயக்குநராக சினிமாவில் நுழைந்து, பின் மாபெரும் இயக்குநராக உருவெடுத்தவர் கே பாக்யராஜ் (K Bhagyaraj) (73 வயது). இவர் சினிமாவில் வெறும் இயக்குநராக மட்டுமல்லாமல், ஹீரோவாகவும் படங்களில் நடித்திருக்கிறார். தனது இயக்கத்தில், தானே நடிகராக நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர் சினிமாவில் பல்வேறு நட்சத்திர நடிகர்களுக்கு தந்தை வேடத்திலும் நடித்து வரவேற்பை பெற்றிருந்தார். இவர் சமீபத்தில் நடைபெற்றிருந்த குஷ்பு (Khusbhu) மக்களின் திருமணத்திற்கு சென்று திருப்பிய அவர், கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 27ம் தேதியில் உடல்நல பாதிப்பின் காரணமாக காலமானார்.

இவரின் இறப்பு ஒட்டுமொத்த திரையுலகினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. நேற்று (27/206/2026) அவரின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பலரும் அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதையும் படிங்க: நடிப்பிலும் இயக்கத்திலும் பல வெற்றிகளைப் பெற்ற பாக்யராஜின் பயணம் – ஒரு பார்வை

அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட பாக்யராஜின் உடல் :

அவரின் உடலுக்கு முதல்வர் முதல் பல்வேறு சினிமா பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர். மேலும் இன்று (28/06/2026) காலையிலே அவரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்ட மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவரின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில், 72 குண்டுகள் முழக்கங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது. இவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே பாக்யராஜ் இறப்பிற்கான காரணம் என்ன:

இயக்குநரும், நடிகருமான கே பாக்யராஜ், கடந்த 2026ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியில் கோவாவில் நடந்த குஷ்புவின் மக்கள் அவந்திகாவின் திருமணத்தில் கலந்துகொண்டார். அந்த திருமணத்தை முடித்துவிட்டு, 2026ம் ஆனது ஜூன் 26ம் தேதி இரவில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். மேலும் நேற்று (27/06/2026) காலையில் தனது மனைவி பூர்ணிமாவுடன் நடைபயிற்சிக்காக சென்றுள்ளார். நடைப்பயணத்தை முடித்த அவர், தனது வீட்டில் சோபாவில் உட்கார்ந்து யாரிடமோ போனில் பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: பாக்யராஜோட பெரிய மைனஸ்.. அந்த படத்தில் அவர் சொன்னதுதான் நான் பண்ணேன் – ரஜினி பகிர்ந்த மறக்கமுடியாத விஷயம்!

அப்போது திடீரென அவர் மயங்கிய நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். எனவே அவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இவரின் மறைவிற்கு அரசியல் பிரபலனங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow Us