AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிப்பிலும் இயக்கத்திலும் பல வெற்றிகளைப் பெற்ற பாக்யராஜின் பயணம் – ஒரு பார்வை

K Bhagyaraj Achieving Success in Both Acting and Directing | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நாயகனாகவும் வலம் வந்தவர் கே பாக்யராஜ். இவர் தனது 73-வயதில் இன்று உடல் நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில் திரையுலகில் இவர் நிகழ்த்திய அற்புதங்களை தற்போது பார்க்கலாம்.

நடிப்பிலும் இயக்கத்திலும் பல வெற்றிகளைப் பெற்ற பாக்யராஜின் பயணம் – ஒரு பார்வை
கே பாக்யராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jun 2026 11:25 AM IST

தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் வெற்றிப் படங்களை இயக்கியும் நாயகனாக நடித்தும் உள்ளவர் கே பாக்யராஜ். பாக்யராஜ் ஒரு படத்தினை இயக்கி உள்ளார், அதில் நாயகனாக நடித்து உள்ளார் என்றால் அந்தப் படத்தில் நிச்சயமாக ஒரு சமாச்சாரம் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றும் அளவிற்கு அவரது படங்கள் மக்களிடையே பிரபலமானதாக இருந்தது. தொடர்ந்து பலப் படங்களை இயக்கியும் நடித்தும் வந்த பாக்யராஜ் கடந்த 2010-ம் ஆண்டிற்கு பிறகு படங்களை இயக்குவதில் இருந்து விலகு முழுவதுமாக நடிகராக மட்டுமே வலம் வந்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த பாக்யராஜை இறுதியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா என்ற படத்தில் ஒரு சாது கதாப்பாத்திரத்தில் ரசிகர்கள் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

கோயம்புத்தூரில் பிறந்து ஈரோட்டில் வளர்ந்து சென்னையில் வாழ்ந்த பாக்யராஜ்:

கிருஷ்ண சாமி என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி 1953-ம் ஆண்டு பிறந்தார் பாக்யராஜ். கோயம்புத்தூரில் பிறந்த இவர் ஈரோட்டில் தனது தந்தையின் ஊரில் வளர்ந்துள்ளார். பிறகு சினிமா மீது இருந்த ஆர்வம் காரணமாக தனது திரையுலக வாழ்க்கையை தேடி சென்னை வந்த பாக்யராஜ் திரைத்துறையில் நுழைந்து வெற்றியைக் கண்ட பிறகு சென்னையிலேயே வாழ்ந்து வந்தார். தனது குடும்பத்தினருடன் இறுதி காலம் வரை அங்கேயே கழித்தார்.

இவர் சினிமாவில் தன்னுடன் பணியாற்றிய பிரவீனா என்ற நடிகையை கடந்த 1981-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே பிரவீனா உடல் நலக் குறைவால் காலமானார். பிறகு நடிகை பூர்ணிமாவை 1984-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உள்ளனர்.

இயக்குநர் இமயத்தின் சிஷ்யன் கே பாக்யராஜ்:

தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் என்று ரசிகர்களாலும் திரையுலக பிரபலங்களாலும் கொண்டாடப்படுபவர் பாரதி ராஜா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஆதர்ச சிஷ்யனாம வலம் வந்தவர்தான் கே பாக்யராஜ். தனது சிஷ்யன்களிலேயே பாக்யராஜ் சிறந்தவர் என்று இயக்குநர் இமையம் பல இடங்களில் பெருமையாக பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் இமயத்தின் ஆரம்ப காலக்கட்டத்திலேயே அவரது சிஷ்யனாக உள்ளார் கே பாக்யராஜ். அதன்படி 16 வயதினேலே படத்தில் தனது உதவி இயக்குநர் பணியைத் தொடங்கிய பாக்யராஜ் தொடர்ந்து அவரது படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இயக்குநர் பாரதி ராஜாவிடம் இருந்து நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டையும் கற்றுக் கொண்டார் பாக்யராஜ்.

சுவரில்லாத சித்திரங்கள் டூ சித்து +2 கே.பாக்யராஜின் இயக்குநர் வாழ்க்கை:

கடந்த 1979-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முதல் எட்டை வைத்தார் கே.பாக்யராஜ். அதனைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு வரை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயக்குநராக பலப் படங்களை இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சின்ன வீடு, வீட்ல விஷேசம் என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… நான் அந்த கதாப்பாத்திரத்தின் நடிக்க யோசிக்கல – அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்

50 ஆண்டுகளுக்கு மேலாக நடிகராக பயணித்த கே.பாக்யராஜ்:

16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய போதே பெயரிடப்படாத கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய பாக்யராஜ் அதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். இவர் தானே இயக்கும் படங்களில் நாயகனாக நடித்தது மட்டும் இன்றி மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 2010-ம் ஆண்டு வரை இயக்குநராக வலம் வந்த இவர் தொடர்ந்து நடிகராகவும் பலப் படங்களில் நடித்து வந்தார். அதன்படி இறுதியாக தனுஷ் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியான குபேரா படத்தில் சாதுவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் பாக்யராஜ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… பத்ம பூஷன் விருது பெற்ற மம்முட்டி… கொண்டாடிய ஓம் படக்குழுவினர்

Follow Us