AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிளாஸ்ட் படத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு வழக்கத்திற்கு மாறான தேர்வு – பிரீத்தி முகுந்தன்!

Actress Preity Mukundhan talks about the Blast movie | பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரீத்தி முகுந்தன். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிளாஸ்ட் படத்தில் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்ட் படத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு வழக்கத்திற்கு மாறான தேர்வு – பிரீத்தி முகுந்தன்!
பிளாஸ்ட் Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2026 20:15 PM IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ஓம் பீம் புஷ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை பிரீத்தி முகுந்தன். இவர் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதே போல தமிழ் மொழியில் இவர் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ஸ்டார் என்ற படத்தில் நடிகையாக நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். அதன்படி இந்த ஸ்டார் படத்தில் நடிகர் கவினுக்கு காதலியாக நடிகை பிரீத்தி முகுந்தன் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் மட்டும் இன்றி மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களில் நடிகை பிரீத்தி முகுந்தன் நடித்து வருகிறார். அதன்படி அவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் பிளாஸ்ட். இந்தப் படத்தில் நடிகை பிரீத்தி முகுந்தன் ஆக்‌ஷன் நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்ட் படத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு வழக்கத்திற்கு மாறான தேர்வு:

பிளாஸ்ட் திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு வழக்கத்திற்கு மாறான முடிவாகும்; எனக்குப் பதிலாக வேறு எந்த நடிகை அந்த இடத்தில் இருந்திருந்தாலும், அத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்கத் தயங்கியிருக்கவோ அல்லது பயந்திருக்கவோ கூடும். நான் எப்போதும் ஒரு சண்டைக்காட்சிகள் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே விரும்பினேன். படம் வெளியான பிறகு ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பிளாஸ்ட் படத்தில் நடிப்பதற்கு முன்பே நான் இதயம் முரளி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். இதயம் முரளி படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் இனிமையானதாக இருக்கும்; இது ‘பிளாஸ்ட்’ படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது என்று அவர் பேசியிருந்தார்.

Also Read… SK-வின் படத்திலிருந்து எஸ்கேப்பான வெங்கட் பிரபு.. அடுத்த படம் இவருடனா?

இணையத்தில் வைரலாகும் பிரீத்தி முகுந்தன் பேச்சு:

Also Read… Rajinikanth: பாக்யராஜோட பெரிய மைனஸ்.. அந்த படத்தில் அவர் சொன்னதுதான் நான் பண்ணேன் – ரஜினி பகிர்ந்த மறக்கமுடியாத விஷயம்!

Follow Us