AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போலீசாக நினைத்து ரவுடியாக மாறியவரின் கதை இது… ஓடிடியில் வெளியாகி உள்ள லிங்கம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Lingam Web Series Review Here | தமிழ் சினிமாவில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்து வரும் இணையதள தொடர் லிங்கம். ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் பாணியில் ஓடிடியில் வெளியான இந்த தொடர் எப்படி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசாக நினைத்து ரவுடியாக மாறியவரின் கதை இது… ஓடிடியில் வெளியாகி உள்ள லிங்கம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
லிங்கம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2026 20:51 PM IST

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதே மாதிரி ஓடிடியிலும் படங்கள் நேரடியாக படங்கள் மற்றும் இணையதள தொடர்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த வாரம் தமிழ் சினிமாவில் உருவாகி ஓடிடியில் வெளியாகி உள்ள இணையதள தொடர் லிங்கம். க்ரைம் த்ரில்லர் பீரியட் ட்ராமா மற்றும் கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த இணையதள தொடர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி இந்த இணையதள தொடரை இயக்குநர் லக்‌ஷ்மி சரவணன் எழுதி இயக்கி உள்ளார். இந்த இணையதள தொடரின் ட்ரெய்லர் வீடியோ வெளியான போதே அந்த தொடரின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில் அந்த தொடர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்த தொடரில் நடிகர் கதிர் கதையின் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் நிகிலா சங்கர், திவ்ய பாரதி, சத்யா, விமல், பூர்ணிமா ரவி, பிரசாந்த் பாண்டியராஜ், போஸ் வெங்கட் மற்றும் பால சரவணன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த தொடர் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

லிங்கம் வெப் சீரிஸின் கதை என்ன?

கன்யாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதானமான ஒன்றாக உள்ளது. 1980களில் மீன்பிடி தொழில் இல்லை என்றால் பலரும் அடிதடி சண்டை ரௌடிசத்தில் இரங்கி வாழ்க்கையையே தொலைத்து உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இந்த இரண்டிலும் இல்லாமல் மற்றொரு வேலை என்றால் அது விளையாட்டு மற்றும் படிப்பில் அதிக கவனம் செலுத்தில் அரசு வேலைக்கு செல்வதுதான். அப்படி கபடி போட்டியில் பெரிய வல்லவனாக உள்ள கதிர் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார்.

அவரது நண்பர் வழக்கறிஞராக உள்ள சத்யா அந்த ஊரிலேயே பெரிய குடும்பத்தை சேர்ந்தவர். அவரது அண்ணன் தான் போஸ் வெங்கட். வழக்கறிஞர்களாக இவர்கள் இருவரும் இருப்பார்கள். அதிகாரத்தை தன்வசம் வைத்துக்கொள்ள போஸ் வெங்கட் பல சூது வேலைகளை செய்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் காவல்துறை அதிகாரியாக உள்ள கதிர் எதிர்பாராதவிதமாக கொலை வழக்கில் ஜெயிலுக்கு செல்கிறார்.

Also Read… மகுடம் படத்திலிருந்து வெளியானது நச்சிந்தி மச்சானே பாடல்

செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் கதிர் மீண்டும் ஊருக்கு வந்த்போது அவரை அனைவரும் கொலைகாரணாகவே பார்க்கிறார்கள். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவரை மனது அளவில் காயப்படுத்தி இந்த சமூகம் முழுவதுமாக கதிரை எப்படி ரவுடியாக மாற்றுகிறது என்பதே இந்த இணையதள தொடரின் கதை. மொத்தம் 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடர் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… சர்க்கஸ் கூடாரமாக மாறியது பாக்யராஜின் இறுதி அஞ்சலி நிகழ்வு – வேதனை தெரிவித்த ராதிகா

Follow Us