மகுடம் படத்திலிருந்து வெளியானது நச்சிந்தி மச்சானே பாடல்
Nachindhi Machanane Song From Magudam Movie Out Now | நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் மகுடம். இந்தப் படத்தி இருந்து தற்போது இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் விஷால். இவர் நாயகனாக அறிமுகம் ஆன தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து பல ஆக்ஷன் படங்களை தேர்வு செய்து நடித்து வந்ததால் விஷால் படம் என்றாலே சண்டைக் காட்சிகள் நிச்சயமாக இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு எண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடிப்பது மட்டும் இன்றி படங்களை தயாரிக்கும் பணிகளையும் விஷால் செய்து வந்த நிலையில் தற்போது புதிய அவதாரமாக விஷால் இயக்குநர் அவதாரத்தை எடுத்துள்ளார். அதன்படி நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் மகுடம் படத்தை முன்னதாக இயக்குநர் ரவி அரசு இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இவர் முன்னதாக ஈட்டி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு விஷால் மற்றும் ரவி அரசு இடையே ஏற்பட்ட மன கசப்பு காரணமாக ரவி அரசு மகுடம் படத்தில் இருந்து விலகினார். பிறகு விஷால் அந்தப் படத்தை தானே இயக்க முடிவு செய்து தமிழ் சினிமாவில் தற்போது இயக்குநராகவும் அறிமுகம் ஆகி உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் தற்போது விஷால் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ள மகுடம் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




மகுடம் படத்திலிருந்து வெளியானது நச்சிந்தி மச்சானே பாடல்:
இந்த நிலையில் மகுடம் படத்தில் இருந்து தற்போது இரண்டாவது லிரிக்கள் வீடியோவாக நச்சிந்தி மச்சானே என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் பாடலை பாடகர்கள் மங்லி மற்றும் வேல்முருகன் இருவரும் இணைந்து பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஷால் உடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெய பிரகாஷ், அஜய், வம்சி கிருஷ்ணா, அபு சலீம், அர்ஜய், விஜே ஜான்சி, பதம் குமார், சாபுமோன் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… நடிப்பிலும் இயக்கத்திலும் பல வெற்றிகளைப் பெற்ற பாக்யராஜின் பயணம் – ஒரு பார்வை
நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The beats are here. The celebration begins! #NachindhiMachane / #NachchaakeVachera is OUT NOW! 🎶
Tamil – https://t.co/8djOYAezyX
Telugu – https://t.co/gljwxAmiY0A @gvprakash Musical @yours_anjali @dushara_vijayan @dhilipaction @supergoodfilms#Magudam #Makutam pic.twitter.com/nxiIzg1nDe
— Vishal (@VishalKOfficial) June 29, 2026
Also Read… நடிகை த்ரிஷா தமிழகத்தின் துணை முதல்வராகலாம்… ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!