Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் Vs வெள்ளி Vs பங்குச்சந்தை.. 2026-ல் எது சிறந்த லாபத்தை கொடுக்கும்.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!

Gold Vs Silver Vs Share Market | 2025 ஆம் ஆண்டு தங்கம், வெள்ளி என இரண்டுமே சிறந்த லாபத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் தங்கம், வெள்ளி மற்றும் பங்குச்சந்தையில் எது சிறந்த லாபத்தை கொடுக்க உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம் Vs வெள்ளி Vs பங்குச்சந்தை.. 2026-ல் எது சிறந்த லாபத்தை கொடுக்கும்.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Jan 2026 11:48 AM IST

2025 ஆம் ஆண்டு தங்கத்திற்கு (Gold) மிக சிறந்த ஆண்டாக அமைந்தது. காரணம், 2025 தொடங்கியது முதலே தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்திக்க தொடங்கியது. இதன் காரணமாக ஆண்டின் இறுதியில் தங்கத்தில் முதலீடு செய்திருந்தவர்கள் நல்ல லாபத்தை பெற்றனர். தங்கம் மட்டுமன்றி, வெள்ளியும் 2025-ல் நல்ல லாபத்தை தந்த முத்லீடாக தான் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2025-ல் வெள்ளி சுமார் 178 சதவீதம் வரை உயர்வை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஆரம்பத்திலேயே வெள்ளியில் முதலீடு செய்யாமல் விட்டுவிட்டோம் என பலரும் வருந்தினர். இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் தங்கம், வெள்ளி (Silver), பங்குச்சந்தை (Share Market) மற்றும் ரியல் எஸ்டேட் (Real Estate) . இவை மூன்றில் எது சிறந்த லாபத்தை கொடுக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெள்ளி  : தடுமாற்றங்களுடன் விலை உயர வாய்ப்பு உள்ளது

2025-ல் வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை சந்தித்தது. இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 2025 தொடக்கத்தில் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளி தற்போது 2.60 லட்சத்திற்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக பலரும் வெள்ளியில் முதலீடு செய்ய ஆர்வம் கட்டுகின்றனர். வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக அதன் நுகர்வும் அதிகரித்திள்ளது. இனி வரும் காலங்களிலும் வெள்ளியின் தேவை அதிகமாக உள்ளதால் அது மேலும் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. ஆனால், வெள்ளியில் முதலீடு செய்யும் நபர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : Gold Price : ஒரே நாளில் சரசரவென சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை.. ரூ.3,360 குறைந்த தங்கம்!

தங்கம் : நிலைத்தன்மையுடன் கொண்ட விலையேற்றம் இருக்கும்

நிச்சயமற்ற முதலீடுகளுக்கு மத்தியில் பாதுகாப்பு வழங்கும் முதலீடாக தங்கம் இருந்து வருகிறது. மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைப்பது, இடிஎஃப் முதலீடு, அமெரிக்க டாலரின் வீழ்ச்சி ஆகியவை தங்கம் பல மடங்கு உயர முக்கிய காரணமாக இருந்தது. என்னதான் தங்கத்தின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தகூடிய பல்வேறு காரணிகள் இருந்தாலும், இனி வரும் காலங்களிலும் தங்கம் சிறந்த லாபத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. ஆனால், சந்தை நிலவரம், முறையான முதலீடு ஆகியவை தங்கத்தில் பாதுகாப்பான லாபத்தை பெற உதவும்.

இதையும் படிங்க : ரூ.18-ல் இருந்து ரூ.72-க்கு உயரும் சிகரெட் விலை?.. புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை திருத்தும் அரசு!

பங்குச்சந்தை : வருமானம் லாபத்தை தீர்மானம் செய்யும்

பங்குச்சந்தையை பொருத்தவரை தனியார் நிறுவனங்களின் வருமானம் தான் லாப்த்தை முடிவு செய்யும். காரணம் பங்குச்சந்தையை பொருத்தவரை தனியார் நிறுவனங்களின் பங்குகளில் செய்யப்படுகிறது. இந்த நிலையில், நீங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனம் நல்ல வருமானத்தை ஈட்டியது என்றால் உங்களுக்கு லாபம் அதிகமாக இருக்கும். இதுவே நீங்கள் முதலீடு செய்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தால் லாபம் மிகவும் குறைவானதாக இருக்கும்.