Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EPFO : பணியில் இருந்து விலகினாலும் பிஎஃப் கணக்குக்கு வட்டி வழங்கப்படுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Provident Fund Interest Rate | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களின் பிஎஃப் கணக்கிற்கு வட்டி வரவு வைக்கப்படும். இந்த நிலையில், ஊழியர் பணியில் இருந்து விலகினாலும் அவரது பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : பணியில் இருந்து விலகினாலும் பிஎஃப் கணக்குக்கு வட்டி வழங்கப்படுமா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Dec 2025 12:52 PM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வரப்பிரசாதமாக உள்ளது தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). காரணம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களின் நலனுக்கான திட்டமாக உள்ளது. அதாவது ஊழியர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதில் பல அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியர்களின் பெயர்களிலும் பிஎஃப் (PF – Provident Fund) கணக்கு தொடங்கப்படும்.

இந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும். இந்த நிலையில், ஒருவர் பணியில் இருந்து விலகிய பிறகும் அவருக்கு பிஎஃப் வட்டி வழங்கப்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பணியில் இருந்து விலகினாலும் வட்டி வழங்கப்படுமா?

வேலையில் இருந்து விலகிவிட்டால் மூன்று ஆண்டுகள் கழித்து பிஎஃப் வட்டி பெறுவது நிறுத்தப்படும் என பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. காரணம், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வகுத்துள்ள விதிகளின்படி, ஒரு ஊழியர் பணியில் இருந்து விலகினாலும் கூட அவரது பிஎஃப் கணக்கில் தொடர்ந்து வட்டி வரவு வைக்கப்படும் என்பது தான்.

இதையும் படிங்க : Aadhaar Card : 2026 முதல் ஆதாரில் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. என்ன என்ன?

தொடர்ந்து பிஎஃப் வட்டி பெற இது கட்டாயம்

அவ்வாறு ஊழியர்கள் தொடர்ந்து பிஎஃப் வட்டி பெற வேண்டும் என நினைத்தால் அவர்கள் தங்களது பிஎஃப் கணக்கை யுஏஎன் (UAN – Universal Account Number) உடன் இணைத்திருப்பது கட்டாயமாக உள்ளது. அவ்வாறு நீங்கள் பிஎஃப் கணக்குடன் யுஏஎன் எண்ணை இணைத்திருக்கும் பட்சத்தில் உங்களுக்கு 58 வயது ஆகும் வரையும், அல்லது நீங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் எடுக்கும் வரையில் வட்டி வழங்கப்படும். நீங்கள் பணியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்னரோ விலகி இருந்தாலும் இது பொருந்தும்.

இதையும் படிங்க : ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்த வெள்ளி.. வரலாறு காணாத உச்சம்.. தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் விதிகளின் படி ஒரு ஊழியர் பணியில் இருந்து நீங்கிய 36 மாதங்களுக்கு பிறகும் அந்த கணக்கு செயலில் உள்ளதாக இருக்கும். அதன் பிறகு அந்த பிஎஃப் கணக்கு செயலில் இல்லாத கணக்காக மாறிவிடும். கணக்கு செயலற்றதாக மாறினாலும், அந்த கணக்கு வட்டி பெற தகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.