ரூ.18-ல் இருந்து ரூ.72-க்கு உயரும் சிகரெட் விலை?.. புகையிலை பொருட்கள் மீதான கலால் வரியை திருத்தும் அரசு!
Central Government Of India To Hike Excise Duty | மத்திய அரசு கலால் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில், இதன் காரணமாக புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கான விலை அதிரடியாக உயர உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு (Central Government) கலால் திருத்த மசோதாவை, நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது. அது சட்டமாக மாற்றப்படும் பட்சத்தில் இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விலை உயரும் என கூறப்படுகிறது. காரணம், கலால் சட்ட திருத்தத்தால் புகையிலை மீதான வரிகள் 25 சதவீதம் முதல் 100 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த காரணமாக, ஒரு சிகரெட் விலை ரூ.18-ல் இருந்து ரூ.72 ஆக உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
புகையிலை பொருட்களின் மீதான கலால் வரிகளை திருத்துகிறது
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சிங் சவுத்ரி அறிமுகம் செய்துள்ள இந்த மசோதா காரணமாக சிகரெட், சுருட்டுகள், குட்கா மற்றும் மெல்லும் புகையிலை வரை பல்வேறு புகையிலை பொருட்கள் மீதான கலால் வரிகளை (Excise Duty) திருத்துகிறது. அதாவது இந்த பொருட்கள் மீதான கலால் மற்றும் வீத வரியை உயர்த்துகிறது. இந்த திருத்தத்தின் படி, சிகரெட்டுகளுக்கு 1,000 குச்சிகளுக்கு ரூ.200 முதல் ரூ.735 வரை இருந்த கலால் வரி ரூ.2,700 முதல் ரூ.11,000 ஆக உயரும். இந்த விலை ஒவ்வொரு சிகரெட்டின் வகை மற்றும் அவற்றின் நீளத்தை பொருத்து தீர்மானிக்கப்படும்.
இதையும் படிங்க : ஜனவரி 10-க்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!
புகையிலை மீதான வரி 4 மடங்கு அதிகரிக்கும்
மெல்லும் புகையிலை மீதான வரிகள் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை என நான்கு மடங்கு அதிரடியாக உயர உள்ளது. இதேபோல குட்கா புகையிலை 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயர உள்ளது. மேலும் புகைபிடிக்க பயன்படுத்தும் குழாய்கள் மற்றும் புகையிலை கூறுகளின் கலவைக்கான வரி ஐந்து மடங்கு அதிகரிக்க உள்ளது. அதாவது 60 சதவீதம் முதல் 300 சதவீதம் வரை அதிகரிக்கும்.
இதையும் படிங்க : Aadhaar Card : 2026 முதல் ஆதாரில் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. என்ன என்ன?
இதன் காரணமாக வெறும் ரூ.18-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சிகரெட்டின் விலை ரூ.72 ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.