Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்களுக்கு முறையாக ஊதியம், இன்சன்டிவ் வழங்கப்படவில்லையா?.. அப்போ இத பண்ணுங்க!

Incentive and Monthly Salary Issue | நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு மாத ஊதியம், இன்சன்டிவ் ஆகியவற்றை தவறாமல் வழங்க வேண்டும் என்பது சட்ட ரீதியாக அமலில் உள்ளது. இந்த நிலையில், மாத ஊதியம் மற்றும் இன்சன்டிவ் முறையாக கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

உங்களுக்கு முறையாக ஊதியம், இன்சன்டிவ் வழங்கப்படவில்லையா?.. அப்போ இத பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jan 2026 23:51 PM IST

பொதுமக்கள் தங்களது வாழ்க்கையை வாழ பொருளாதாரம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு வாழ்க்கை இயங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் சிலர் ஏதேனும் தொழில் செய்து தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள மாத ஊதியத்திற்கு வேலைக்கு செல்கின்றனர். மாத ஊதியத்தை மையப்படுத்தியே அவர்கள் தங்களது வாழ்க்கையை வாழ்கின்றனர். இத்தகைய சூழலில் மாத ஊதியம் (Monthly Salary), இன்சன்டிவ் (Incentive) உள்ளிட்டவை முறையாக வழங்கப்படவில்லை என்றால் அவர்கள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்த நிலையில், ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் மற்றும் இன்சன்டிவ் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாத ஊதியம், இன்சன்டிவ் கொடுக்காமல் இருக்கும் நிறுவனங்கள்

பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சேர வேண்டிய மாத ஊதியம், இன்சன்டிவ் ஆகியவற்றை முறையாக வழங்குகின்றன. ஆனால், சில நிறுவனங்கள் காலம் தாழ்த்தி மாத ஊதியம் வழங்குவது, மாத ஊதியம் மற்றும் இன்சன்டிவ் வழங்காமல் இருப்பது உள்ளிட்ட செயல்களை செய்கின்றன. பெரும்பாலும் ஆரம்ப நிலையில் இருக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இத்தகைய சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். ஊதியம் வழங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ள நிலையில், ஊதியம் வழங்கும் நிறுவனங்கள் இன்சன்டிவ் உள்ளிட்ட சலுகைகளை வழங்காமல் இருப்பர். இந்த நிலையில், மாத ஊதியம் மற்றும் இன்சன்டிவ் ஆகியவை ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள் அன்றி அவை சட்ட ரீதியாக ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டியவை என்பதை சட்ட வல்லுநர்கள் உறுதி செய்கின்றனர்.

இதையும் படிங்க : இந்த ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 கிடைக்காது.. எந்த எந்த அட்டைகள்!

மாத ஊதியம், இன்சன்டிவ் முறையாக வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு மாத ஊதியம் உரிய கால நேரத்திற்குள் வழங்கப்படவில்லை என்றால் முதலில் நீதிமன்றத்துக்கு செல்லாமல், அந்த விவகாரம் குறித்து நிறுவனத்தில் புகார் எழுப்புங்கள் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். பிறகு இந்த விவகாரம் தொடர்பாக மின்னஞ்சல், லீகல் நோட்டீஸ் ஆகியவற்றை அனுப்பலாம். காரணம், இவ்வாறு ஊதியம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் பட்சத்தில் ஊழியர்கள் அது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பதை தான் நீதிமன்றம் கவனிக்கும். எனவே இந்த சிக்கல் தொடர்பான பதிவுகள் மற்றும் ஆதாரங்களை சேமித்து வைப்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

இதையும் படிங்க : Gold : வெனிசுலா விவகாரம்.. அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் ரூ.8,000 உயர்ந்த வெள்ளி!

இந்த சிக்கல் குறித்து தங்களது அலுவலகத்தில் உள்ள மனித வள மேம்பாட்டு துறையை (Human Resources Department) அனுகி முதலில் வாய் வார்த்தையாக கோர வேண்டும். அதன் பிறகும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற நிலையில் எழுத்து பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட அலோசகர்கள் கூறுகின்றனர்.