Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold : வெனிசுலா விவகாரம்.. அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் ரூ.8,000 உயர்ந்த வெள்ளி!

Gold and Silver Price Hiked | வெனிசுலா விவகாரத்தின் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.640 மற்றும் வெள்ளி கிலோவுக்கு ரூ.8,000 உயர்வை சந்தித்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold : வெனிசுலா விவகாரம்.. அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் ரூ.8,000 உயர்ந்த வெள்ளி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Jan 2026 11:21 AM IST

சென்னை, ஜனவரி 05 : அமெரிக்காவுக்கு (America) சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்துவதாக வெனிசுலா (Venezuela) மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த நிலையில், வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக உருவாகியுள்ள புவிசார் பதற்றத்தின் எதிரொளியாக தங்கம் விலை கடும் உயர்வை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (ஜனவரி 05, 2026) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது தங்கம் விலை மீண்டும் ரூ.1,1,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிற்து. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெனிசுலா விவகாரம் – தங்கம், வெள்ளி விலை உயரும் என கணிப்பு

உலக நாடுக்ளுக்கு இடையே போர் நிலவும் பட்சத்தில் அது புவிசார் பதற்றத்தை அதிகரிக்கும். அதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களின் விலை உயர்வை சந்திக்கும். ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – காசா உள்ளிட்ட போர்களால் தங்கம் விலை மிக கடுமையான உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி தங்கம் விலை மேலும் உயர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் வழிவகை செய்துள்ளார்.

இதையும் படிங்க : தங்கம் Vs வெள்ளி Vs பங்குச்சந்தை.. 2026-ல் எது சிறந்த லாபத்தை கொடுக்கும்.. பொருளாதார வல்லுநர்கள் கூறுவதை கேளுங்கள்!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

வெனிசுலா விவகாரம் காரணமாக தங்கம் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில், இன்று (ஜனவரி 05, 2026) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,680-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,01,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : டிச.31-க்குள் பான் – ஆதாரை இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஒரே நாளில் ரூ.8,000 உயர்ந்த வெள்ளி விலை

தங்கத்தை போலவே வெள்ளியும் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. இன்றைய (ஜனவரி 05, 2026) நிலவரப்படி வெள்ளி கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.265-க்கும் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.