AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்த வெள்ளி.. ரூ.3 லட்சத்தை நெருங்குகிறது!

Silver Price Hiked 12000 Rupees | வெனிசுலா மற்றும் அமெரிக்கா விவகாரம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜனவரி 07, 2026) வெள்ளி விலை ரூ.12,000 உயர்வை சந்தித்துள்ளது.

Gold Price : ஒரே நாளில் ரூ.12,000 உயர்ந்த வெள்ளி.. ரூ.3 லட்சத்தை நெருங்குகிறது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Jan 2026 23:58 PM IST

சென்னை, ஜனவரி 07 : அமெரிக்கா – வெனிசுலா (America – Venezuela) விவகாரம் காரணமாக தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) விலையில் மிக கடுமையான மாற்றம் ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜனவரி 07, 2026) ஒரே நாளில் வெள்ளி ரூ.12,000 உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வெனிசுலா விவகாரம்

அமெரிக்கா, வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியுள்ளது மற்றும் வெனிசுலாவின் அதிபரை கைது செய்துள்ளது உள்ளிட்டவை காரணமாக புவிசார் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காரணம் வெனிசுலாவுக்கு ஆதரவாக சில நாடுகளும், அமெரிக்காவுக்கு ஆதரவாக சில நாடுகளும் கருத்து தெரிவித்து வருகின்றன. இவ்வாறு வெனிசுலா – அமெரிக்கா இடையே நிலவும் இந்த மோதல் போக்கு காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை சந்திக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இதையும் படிங்க : தற்போது வெள்ளியில் முதலீடு செய்யாதீங்க.. எச்சரித்த முக்கிய பொருளாதார வல்லுநர்!

ஒரே நாளில் ரூ,12,000 உயர்ந்த வெள்ளி விலை

வெனிசுலா மற்றும் அமெரிக்கா விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெள்ளி அதிரடியாக விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஜனவரி 07, 2026) வெள்ளி ரூ.12,000 உயர்வை கண்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளி விரைவில் ரூ.3 லட்சத்தை எட்டும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : வெனிசுலா அட்டாக்.. தங்கம் விலை தாறுமாறா அதிகரிக்குமா? என்ன நடக்கபோகுது?

Follow Us