தற்போது வெள்ளியில் முதலீடு செய்யாதீங்க.. எச்சரித்த முக்கிய பொருளாதார வல்லுநர்!
Peter Schiff Warned About Silver Investment | 2025-ல் வெள்ளி விலை 140 சதவீதம் வரை உயர்ந்த நிலையில், பலரும் வெள்ளியில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி வெள்ளியில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று பொருளாதார வல்லுநர் பீட்டர் செஃப் கூறியுள்ளார்.
2025-ல் தங்கத்தை (Gold) விட பல மடங்கு அதிக உயர்வை வெள்ளி (Silver) சந்தித்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2025-ல் மட்டும் வெள்ளி சுமார் 140 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. வெள்ளி இத்தகைய கடுமையான விலை உயர்வுக்கு அதன் தேவை அதிகரித்துள்ளது முக்கிய காரணமாக கூறப்பட்டது. மின்சார் வாகனங்கள் முதல் பல துறைகளில் வெள்ளியின் தேவை அதிகமாக உள்ளதாகவும், அதன் காரணமாகவே வெள்ளி கடுமையான விலை உயர்வை சந்தித்து வருவதாகவும் அறிக்கைகள் கூறி வந்தன. இந்த நிலையில், முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் வெள்ளியில் முதலீடு செய்வது குறித்து பொதுமக்களை கடுமையாக எச்சரித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்க்லாம்.
வெள்ளியில் முதலீடு செய்ய திட்டமிட்ட பொதுமக்கள்
2025-ல் வெள்ளி பலமடங்கு உயர்வை சந்தித்த நிலையில், 2026-ல் வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டும் என பலரும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் தான், 2008 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை துல்லியமாக கணித்த டாக்டர் டூம் என அழைக்கப்படும் பீட்டர் சிஃப் எனும் பொருளாதார நிபுணர் வெள்ளியில் முதலீடு செய்வது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க : டிச.31-க்குள் பான் – ஆதாரை இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்
பீட்டர் சிஃப்பின் வெள்ளி முதலீடு குறித்த எக்ஸ் பதிவு
There is too much short-term risk to buy physical silver now. But I’m not selling any of mine. So I think it makes sense to wait for it to settle down before buying. But absolutely buy gold right now. At ,534 it’s a steal.
— Peter Schiff (@PeterSchiff) December 28, 2025
பீட்டர் சிஃப் தனது எக்ஸ் பக்கத்தில் தற்போது வெள்ளியில் முதலீடு செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார். வெள்ளி விலை தற்போது மிக அதிக ஏற்ற, இறக்கத்தில் உள்ளது. எனவே வெள்ளியில் முதலீடு செய்து சிக்கலில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வெள்ளி முதலீட்டில் குறுகிய கால ஆபத்து உள்ளது. எனவே அது குறித்து மிகவும் கவனமாக செயல்படுங்கள். கையில் இருக்கும் பணத்தை வைத்து தங்கத்தை வாங்கி போடுங்கள். உங்களிடம் ஏற்கனவே கைவசம் இருக்கும் வெள்ளியை விற்பனை செய்யாமல் இருங்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


