Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Bank Holiday : ஜனவரி 12 முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. வங்கி தேவைகள் இருந்தால் முறையாக பிளான் பண்ணுங்க!

Continuous 6 Days Bank Holiday | வங்கிகளுக்கு வார விடுமுறை, உள்ளூர் விடுமுறை, பண்டிகை ஆகியவற்றின் காரணமாக விடுமுறை அளிக்கப்படும். இந்த நிலையில், 12 ஜனவரி 2026 முதல் 18 ஜனவரி 2026 வரை வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Bank Holiday : ஜனவரி 12 முதல் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. வங்கி தேவைகள் இருந்தால் முறையாக பிளான் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Jan 2026 12:51 PM IST

பொதுமக்களின் அன்றாட வாழ்வில் வங்கி சேவைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதற்காக வங்கிகள் வாரம் முழுவதும் இயங்கினாலும், வார விடுமுறை, அரசு விடுமுறை, உள்ளூர் பண்டிகளைகள் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2026, ஜனவரி மாதத்திற்கான விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது (RBI – Reserve Bank Of India). அதில் 12.01.2026 முதல் 18.01.2026 வரை 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

  • 12 ஜனவரி 2026 – சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • 14 ஜனவரி 2026 – மகர் சங்கராந்தி பண்டிகை என்பதால் அன்றைய தினம் ஒடிசா, குஜராத், அருணாச்சல பிரதேசம், அசாம் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • 15 ஜனவரி 2026 – உத்தராயண புண்ணிய கால, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • 16 ஜனவரி 2026 – திருவள்ளுவர் தினம் என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • 17 ஜனவரி 2026 – உழவர் திருநாள் என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • 18 ஜனவரி 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உங்களுக்கு முறையாக ஊதியம், இன்சன்டிவ் வழங்கப்படவில்லையா?.. அப்போ இத பண்ணுங்க!

வங்கிகள் செயல்படாத போது என்ன செய்ய வேண்டும்?

ஜனவரி 12, 2026 முதல் வங்கிகளுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள், அதனை மையப்படுத்தி தங்களது வங்கி தேவைகளை திட்டமிட்டுக்கொள்வது சிறப்பானதாக இருக்கும். ஒருவேளை மேற்குறிப்பிட்ட விடுமுறை நாட்களில் உங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் வங்கிகளின் இதர சேவைகளை பயன்படுத்தி பூர்த்தி செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Aadhaar : பிவிசி ஆதார் கார்டுக்கான கட்டணம் அதிரடி உயர்வு.. இனி ரூ.50 இல்லை!

வங்கிகளின் இதர சேவைகளான ஏடிஎம் (ATM – Automated Teller Machine), நெட் பேங்கிங் (Net Banking), யுபிஐ (UPI – Unified Payment Interface) ஆகியவை எப்பொழுதும் போல 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும். எனவே பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தி தங்களது வங்கி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.