Aadhaar : பிவிசி ஆதார் கார்டுக்கான கட்டணம் அதிரடி உயர்வு.. இனி ரூ.50 இல்லை!
PVC Aadhaar Card Price Hiked | இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ள நிலையில், பிவிசி ஆதார் கார்டுக்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்திய குடிமக்களுக்கு மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. ஆதார் இவ்வளவு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ள நிலையில், அதனை அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற தேவை உள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், வாக்களிப்பது வரை என பல தேவைகளுக்கும், அரசின் சேவைகளை பெறவும் ஆதார் கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில் தான் ஆதார் கார்டின் விலையை அதிரடியாக உயர்த்தி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆதார் கார்டின் விலையை உயர்த்திய இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தான், இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு வழங்கும் பணியை செய்து வருகிறது. பெயர், வயது, பாலினம், முகவரி, கைரேகை, புகைப்படம், கண் ரேகை என முக்கிய தகவல்களுடன் கூடிய 12 இலக்க எண் கொண்ட பிவிசி ஆதார் அட்டையை (PVC Aadhaar Card) இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளம் மூலமே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதற்காக இதுவரை ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : டிச.31-க்குள் வருமான வரி ரீஃபண்டுக்கு விண்ணப்பிக்கவில்லையா?.. அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!




ஜனவரி 1, 2026 முதல் கட்டணத்தை உயர்த்திய UIDAI
இந்த நிலையில், ஜனவரி 1, 2026 முதல் பிவிசி ஆதாருக்கான கட்டணத்தை உயர்த்தி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இனி புதிய ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள் வழக்கமாக செலுத்தும் ரூ.50 கட்டணத்திற்கு பதிலாக இனி ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது இந்த பிளாஸ்டிக் அதார் கார்டுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 2026-ல் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதுகாக்க இவற்றை பின்பற்றுங்கள்.. முக்கிய டிப்ஸ்!
இ ஆதார் (e Aadhaar), பேப்பர் ஆதார் (Paper Aadhaar) போலவே இந்த பிளாஸ்டிக் ஆதார் கார்டும் செல்லத்தக்க ஆவணமாக உள்ளது. எனவே பிவிசி ஆதார் கார்டை பெற விரும்பும் நபர்கள் இந்திய தனித்து அடையாள ஆணையத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் பட்சத்தில் வெறும் 5 நாட்களுக்குள் பிவிசி ஆதார் கார்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.