டிச.31-க்குள் வருமான வரி ரீஃபண்டுக்கு விண்ணப்பிக்கவில்லையா?.. அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!
Did You Miss Revised ITR Filing Deadline | திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2025 அன்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், அந்த தேதிக்குள்ளாக வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் ஒவ்வொரு நிதியாண்டுக்கும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அவ்வாறு தாக்கல் செய்யப்படும் வருமான வரி திருப்பி செலுத்தப்படும். அந்த வகையில் 2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை பலரும் தாக்கல் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து வருமான வரி ரீஃபண்டுக்காக பலரும் காத்திருந்தனர். அவ்வாறு வருமான வரி ரீஃபண்ட் கிடைக்காதவர்கள் டிசம்பர் 31, 2025-க்குள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று வருமான வரித்துறை கூறியிருந்தது. தற்போது அதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிசம்பர் 31-க்குள் வருமான வரி ரீஃபண்டுக்கு விண்ணப்பிக்கவில்லையா?
நீங்கள் ஏற்கனவே 2024 – 2025 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்திருந்தாலோ அல்லது திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்திருந்தாலோ நீங்கள் டிசம்பர் 31, 2025 காலக்கெடுவை குறித்து கவலைப்பட வேண்டாம். காரணம் இந்த இரண்டு தேதிக்குள் வருமான வரி ரீஃபண்ட் கோரி நீங்கள் விண்ணப்பித்திருந்தால் உங்களுக்கு ரீஃபண்ட் ரத்து செய்யப்படாது. வருமான வரித்துறை இன்னமும் கூட உங்கள்து வருமான வரி ரீஃபண்ட் குறித்து நடவடிக்கை எடுக்கும்.
இதையும் படிங்க : ஸ்விக்கி, சொமேட்டோ, அமேசான் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.. சேவை பாதிப்பு!
திருத்தப்பட்ட வருமான வரிக்கான காலக்கெடு முடிவடைவதற்குள் எந்த விதமான வருமான வரி ரீஃபண்டுக்கும் விண்ணப்பிக்காத நபர்கள் ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது. அதுதான், அப்டேட்டட் ரிட்டர்ன் என்ற ஆப்ஷன். தற்போது அமலில் உள்ள வருமான வரித்துறையின் விதிகளின்படி அப்டேட்டட் ரிட்டர்ன் ஆப்ஷன் மூலம் ரீஃபண்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ரீஃபண்ட் கிடைக்காது. மாறாக அவர்களுக்கு கூடுதலாக வரி விதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.