குளிருக்கு மூட்டிய தீயால் வந்த சிக்கல்.. மூச்சு திணறி பலியான குடும்பம்.. உயிருக்கு போராடும் 10 வயது சிறுமி!
Family of 3 Died Due To Shortness of Breath | அசாமை சேர்ந்த இளைஞர் ஒருவர் குளிருக்கு கதகதப்பாக இருக்க அறையில் தீ மூட்டி வைத்துவிட்டு தனது குடும்பத்துடன் தூங்கியுள்ளார். இந்த நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டு குடும்பத்துடன் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
சண்டிகர், ஜனவரி 12 : பஞ்சாப் (Punjab) மாநிலம், தரன் தரன் மாவட்டம், அலிபூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஷ்தீப் சிங் என்ற 21 வயது இளைஞர். இவருக்கு திருமணமாகி ஜஷந்தீப் கவுர் என்ற 20 வயது மனைவியும், குர்பாஸ் சிங் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இருந்துள்ளது. இந்த நிலையில், அதிக குளிரில் இருந்து தங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ள அர்ஷ்தீப் வீட்டில் நெருப்பு மூட்டியுள்ளார். ஆனால், அந்த நெருப்பே எமனாக மாறி அவர்கள் மூன்று பேரின் உயிரையும் பரித்துள்ளது. இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குளிருக்கு தீ முட்டியதில் வந்த சிக்கல் – சோக சம்பவம்
ஜனவரி 10, 2026 அன்று வாட்டி வதைத்த கடும் குளிரில் இருந்து தங்களை கதகதப்பாக வைத்துக்கொள்ள அர்ஷ்தீப் வீட்டில் தீ மூட்டியுள்ளார். வீட்டில் உள்ள ஒரு அறையில் தீ மூட்டிய அவர், அந்த அறையின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு தனது மனைவி, ஒன்றரை வயது குழந்தை மற்றும் 10 வயதாக உறவுக்கார சிறுமி ஆகியோருடன் தூங்கியுள்ளார். அப்போது அறையில் மூட்டப்பட்டு இருந்த நெருப்பில் இருந்து புகை வெளியேறிய நிலையில், அனைவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு தொழுகை.. விசாரணை வளையத்தில் காஷ்மீர் நபர்!
அறையில் மயங்கி கிடந்த குடும்பத்தினர்
நேற்று (ஜனவரி 11, 2026) வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்த நிலையில், அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது அர்ஷ்தீப் சிங் தனது குடும்பத்துடன் மயங்கி கிடந்ததை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : உங்கள் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றம் அரசால் கண்காணிக்கப்படுகிறதா?.. விளக்களித்த மத்திய அரசு..
உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் சிறுமி
அர்ஷ்தீப் சிங் குடும்பத்தார் பலியான நிலையில், அந்த 10 வயது சிறுமி மட்டும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். அந்த சிறுமிக்கு தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குளிருக்கு தீ மூட்டிய நிலையில், அதுவே ஒரு குடும்பத்தின் மரணத்திற்கு காரணமாக அமைந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.