15 வயது மூத்த பெண் மீது காதல்.. ஆசைக்கு இணங்க மறுத்ததால் கல்லூரி மாணவர் செய்த கொடூரம்!
34 Years Old Woman Killed By College Student | பெங்களூரில் சர்மிளா என்ற 34 வயது பெண் தனியாக வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை ஒருதலையாக காதலித்து வந்த 19 வயது கல்லூரி மாணவர் அவருக்கு கொடூர செயலை செய்துள்ளார்.
பெங்களூரு, ஜனவரி 13 : பெங்களூரு (Bengaluru) ராம மூர்த்தி நகருக்கு அருகே உள்ள சுப்பிரமணிய லே-அவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் சர்மிளா என்ற 34 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் மங்களூரை சேர்ந்தவர், ஆனால் பணி காரணமாக பெங்களூரில் வசித்து வந்துள்ளார். சர்மிளா தனது தோழியுடன் வசித்து வந்த நிலையில், ஜனவாரி 02, 2026 அன்று அவரது தோழி வீட்டிற்கு சென்ற நிலையில், சர்மிளா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
மூச்சுத்திணறி பலியான சர்மிளா?
சர்மிளா வீட்டில் தனியாக இருந்த நிலையில், ஜனவரி 03, 2026 அன்று அவரது வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் நடிபெற்ற நிலையில், சர்மிளா தீ விபத்து காரணமாக மூச்சுத்திணறி உயிரிழந்ததை கண்டு போலீசார் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : குளிருக்கு மூட்டிய தீயால் வந்த சிக்கல்.. மூச்சு திணறி பலியான குடும்பம்.. உயிருக்கு போராடும் 10 வயது சிறுமி!
விசாரணையில் தெரிய வந்த உண்மை
இந்த நிலையில், சர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், அவரது வீட்டின் அருகே உள்ள கல்லூரி மாணவர் கர்னல் என்ற 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்துள்ளன.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி
விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
சர்மிளாவின் வீட்டின் அருகே வசித்து வந்த அந்த 19 வயது இளைஞர், அவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது குறித்து அவர் சர்மிளாவிடம் கூறியது இல்லை. இந்த நிலையில், சம்பவத்தன்று சர்மிளா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துக்கொண்ட கர்னல் அவரது வீட்டின் பால்கனி வழியாக நுழைந்து சர்மிளாவிடம் பாலியல் அத்துமீறலில் இடுபட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே கழுத்தில் தாக்கியுள்ளார். அதில் சர்மிளா மயக்கமடைந்த நிலையில், உண்மை வெளியே தெரியாமல் இருக்க அவர் சர்மிளாவின் கழுத்தை நெறித்து கொலை செய்து பின்னர் அவர் இருந்த அறையை தீ வைத்துள்ளார் என்பது தெரிய் வந்துள்ளது.