T20 World Cup 2026: பிசிசிஐக்கு அதிர்ச்சி! வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்ற ஐசிசி! போட்டி இடம் மாற்றமா?
T20 World Cup 2026 Venue: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுதொடர்பாக இதுவரை அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், வங்கதேசத்தின் போட்டிகளை இலங்கைக்கு மாற்றக்கூடும். தற்போதைய அட்டவணையின்படி, வங்கதேசம் தனது குரூப் சி போட்டிகளை வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7, 9, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் இடையிலான விவகாரம் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்ட விவகாரத்தில் தொடங்கியது. இதன் காரணமாக, 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடத்தப்பட்டாலும் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்றப்பட வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்து வருகிறது. முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அறிவுறுத்தல்களின்படி, ஐபிஎல்லில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முஸ்தாபிசுர் ரஹ்மானை நீக்கியது. இதனை தொடர்ந்து, 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து மாற்றுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. இப்போது, ஒரு ஊடக அறிக்கையின்படி, இந்தியாவில் நடத்தப்படவுள்ள போட்டிகளை மாற்றுவதற்கான வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி அங்கீகரிக்கக்கூடும்.
ALSO READ: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா? நிர்வாகம் வெளியிட்ட அதிரடி பதிவு!
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய முடிவு:
கிரிக்பஸின் கூற்றுப்படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுதொடர்பாக இதுவரை அறிக்கை வெளியிடவில்லை என்றாலும், வங்கதேசத்தின் போட்டிகளை இலங்கைக்கு மாற்றக்கூடும். தற்போதைய அட்டவணையின்படி, வங்கதேசம் தனது குரூப் சி போட்டிகளை வருகின்ற 2026ம் ஆண்டு பிப்ரவரி 7, 9, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, அடுத்த இரண்டு நாட்களுக்குள் இடம் குறித்த முடிவு எதிர்பார்க்கப்படுகிறது.




முன்னதாக, டாக்காவில் நடைபெற்ற வங்கதேச கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில், வங்கதேச அணி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட இந்தியா செல்லாது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்திய சூழல் அதன் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பற்றது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தனது அறிக்கையில் விவரித்ததுடன், உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியது. இந்தக் கோரிக்கைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விரைவில் பதிலளிக்கும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிசிசிஐ நீக்க சொன்ன காரணம் என்ன..?
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இந்த அச்சுறுத்தலுக்குக் காரணம் முஸ்தாபிசுர் ரஹ்மான்தான். 2026 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரஹ்மான் ரூ. 9.20 கோடிக்கு வாங்கப்பட்டார். இருப்பினும், இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான அரசியல் உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், முஸ்தாபிசுர் ரஹ்மானை வாங்கியதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க உத்தரவிட்டது. கொல்கத்தா அணியும் உத்தரவுப்படி முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவித்துள்ளது.