Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: வங்கதேச வீரரை நீக்க சொன்ன பிசிசிஐ.. முக்கிய முடிவு எடுத்த கேகேஆர்! காரணம் என்ன..?

Bangladesh row: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாபிசூரை ஏலத்தில் வாங்கியபோது எதிர்ப்பு தொடங்கியது. குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அதன் உரிமையாளர் ஷாருக்கான் அணியும் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டனர். வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு மத்தியில் பிசிசிஐயை இந்த முடிவை எடுக்க கட்டாயப்படுத்தியது.

IPL 2026: வங்கதேச வீரரை நீக்க சொன்ன பிசிசிஐ.. முக்கிய முடிவு எடுத்த கேகேஆர்! காரணம் என்ன..?
முஸ்தாபிசுர் ரஹ்மான்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Jan 2026 16:28 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, முஸ்தாபிசுர் ரஹ்மான் வருகின்ற 2026 ஐபிஎல் சீசனில் விளையாட முடியாது. தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு வாரியம் இந்த முடிவை எடுத்ததாக பிசிசிஐ செயலாளர் தேபாஜித் சைகியா இந்த முடிவை அறிவித்தார். ஐபிஎல் 2026 ஏலத்திலின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடிக்கு வாங்கியது.

ALSO READ: போக்சோ வழக்கில் சிக்கிய வீரர்.. விரைவில் கைதா..? ஆர்சிபி அணிக்கு ரூ. 5 கோடி நஷ்டமா?

கேகேஆருக்கு பிசிசிஐ உத்தரவு:


இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்ட வீடியோ ஒன்றில், ”சமீபத்திய நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, வங்கதேச வீரர்களில் ஒருவரான முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ, கேகேஆர் அணிக்கு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்தார் .

இருப்பினும், வங்கதேச வீரருக்குப் பதிலாக எந்த மாற்று வீரரையும் அணியில் சேர்த்துக் கொள்ள முழு அனுமதி வழங்கப்படும் என்றும் பிசிசிஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தெரிவித்துள்ளது.

முஸ்தாபிசுர் ரஜ்மான் நீக்கப்பட்ட காரணம் என்ன..?

முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல்லில் சேர்ப்பதற்கு எதிராக சமூக ஊடகங்களிலும் தெருக்களிலும் சமீபத்தில் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு பிசிசிஐ இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, வங்கதேசத்தில் பல இந்துக்களை பெரும்பான்மை மக்களான முஸ்லிம் மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வங்கதேசத்திற்கு எதிராக பல நாடுகளும் கண்டன குரல்களை எழுப்பினர்.

இதுபோன்ற சூழ்நிலையில்தான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தாபிசூரை ஏலத்தில் வாங்கியபோது எதிர்ப்பு தொடங்கியது. குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் அதன் உரிமையாளர் ஷாருக்கான் அணியும் சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டனர். வளர்ந்து வரும் எதிர்ப்புக்கு மத்தியில் பிசிசிஐயை இந்த முடிவை எடுக்க கட்டாயப்படுத்தியது.

ALSO READ: கடைசி நிமிடத்தில் அடுத்தடுத்து மாற்றங்கள்! மகளிர் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் 5 அணிகளின் முழு விவரம்!

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்யுமா?

இருப்பினும், 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்ட இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான தொடர் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியை இது இப்போது எழுப்பியுள்ளது. ஒரு நாள் முன்னதாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்திய அணி 2026 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்காக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று அறிவித்தது. இந்த சுற்றுப்பயணம் முதலில் கடந்த 2025ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆனால், வங்கதேசத்தில் நடந்து வரும் அமைதியின்மை மற்றும் வன்முறை காரணமாக, இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் அதை 2026 க்கு ஒத்திவைத்தன. இப்போது, ​​இந்தத் தொடரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.