AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

‘சூப்பர் 8’ சுற்றில் அதிரப்போகும் குரூப்-1.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்..

T20 World Cup 2026: 'சூப்பர் 8' சுற்றில் புள்ளிகள் அனைத்தும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவதால், பழைய வெற்றிகள் எதற்கும் உதவாது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். குரூப் 1-ல் இருந்து அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அந்த இரண்டு அணிகள் யார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த உலகமே காத்திருக்கிறது.

‘சூப்பர் 8’ சுற்றில் அதிரப்போகும் குரூப்-1.. இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்..
குரூப்-1 அணிகள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 20 Feb 2026 11:35 AM IST

2026 டி20 உலகக்கோப்பை (2026 T20 World Cup) அதன் மிக முக்கியமான ‘சூப்பர் 8’ கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 1 பிரிவானது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய அணி அபாரமான ஃபார்மில் உள்ளது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் எதிரணிகளை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று குரூப்-1ல் ஒரு பகுதியாக உள்ளது. அந்தவகையில், சூப்பர்-8 சுற்றுகள் தொடங்குவதற்கு முன்பே, இந்திய அணி இடம்பெற்றுள்ள அந்த குரூப்-1, “குரூப் ஆஃப் டெத்” என்று அழைக்கப்படுகிறது. இதில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நான்கு பலமான அணிகள் இதில் இடம்பிடித்துள்ளன.

இதையும் படிக்க: IND vs PAK: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது முறையாக மீண்டும் மோதுமா?.. இதோ முழு விவரம்!!

இந்தக் குழுவின் விசேஷமே, இதில் உள்ள நான்கு அணிகளுமே லீக் சுற்றில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் அசுர பலத்துடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பதுதான். இவ்வாறு அனைத்து வலிமையான அணிகளும் ஒரே குழுவில் இணைந்துள்ளது, “மரணக் குழு” (Group of Death) என்று அழைக்கப்படுகிறது. அதேசமயம், அரையிறுதிக்குச் செல்ல இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் ஒவ்வொரு போட்டியும் ஒரு ‘நாக்-அவுட்’ போட்டி போன்ற அழுத்தத்தைத் தரும்.

குரூப்-1ன் பலப்பரீட்சை:

இந்தியா: பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் இந்தியா சமபலத்துடன் முழுமையான ஃபார்மில் உள்ளது. இருப்பினும், ஒரு சிறிய சறுக்கல் ஏற்பட்டால் கூட, ரன்-ரேட் சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும் என்பதால் இந்தியா மிகுந்த கவனத்துடன் ஆட வேண்டும்.

தென்னாப்பிரிக்கா: ஐசிசி தொடர்களில் மிகவும் நிதானமாக விளையாடும் தென்னாப்பிரிக்கா, இம்முறையும் நிதானமான பலத்துடன் தோல்வியே அடையாமல் வந்துள்ளது. இந்தியாவுடனான இவர்களின் மோதல் ஒரு அரையிறுதிப் போட்டிக்கு இணையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள்: டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான மேற்கிந்தியத் தீவுகள் அணி, தங்களின் அதிரடி ஆட்டத்தால் எந்த நேரத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள்.

ஜிம்பாப்வே: இம்முறை உலகக்கோப்பையின் மிகப்பெரிய ‘சர்ப்ரைஸ்’ ஜிம்பாப்வேதான். பெரிய அணிகளை வீழ்த்தி, அச்சமின்றி விளையாடும் இவர்கள், மற்ற மூன்று அணிகளுக்கும் கடும் சவாலாக இருப்பார்கள்.

குரூப்-2 சுலபமானதா?

குரூப் 1-உடன் ஒப்பிடும்போது, குரூப் 2 சற்று மாறுபட்டுக் காணப்படுகிறது. இதில் பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன. இந்தக் குரூப்பில் உள்ள அனைத்து அணிகளுமே லீக் சுற்றில் தலா ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளன. இதில், இலங்கையைத் தவிர மற்ற அணிகள் இன்னும் தங்களின் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சிறிய அணிகளை வீழ்த்தி இந்தச் சுற்றுக்கு வந்துள்ள நிலையில், பெரிய அணிகளிடம் தோல்வியைத் தழுவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்த 2026 உலகக்கோப்பையின் ஸ்டாராக மாறிய ஷிவம் துபே – எப்படி தெரியுமா?

அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார்?

‘சூப்பர் 8’ சுற்றில் புள்ளிகள் அனைத்தும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவதால், பழைய வெற்றிகள் எதற்கும் உதவாது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். குரூப் 1-ல் இருந்து அரையிறுதிக்கு முன்னேறப்போகும் அந்த இரண்டு அணிகள் யார் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த உலகமே காத்திருக்கிறது.