Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையிலிருந்து வங்கதேசம் விலகுகிறதா..? என்ன நடக்கும்..?

Bangladesh Cricket Team: வங்கதேசம் இன்னும் அதிகாரப்பூர்வமாக டி20 உலகக் கோப்பையிலிருந்து விலக முடிவு செய்யவில்லை. ஆனால் அவர்களின் நிலைப்பாடு ஐசிசியின் முடிவை பொறுத்து மாறலாம். இந்த சிக்கலான பிரச்சினையில் ஐசிசி என்ன முடிவு எடுக்கிறது என்பதைப் பார்க்க அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையிலிருந்து வங்கதேசம் விலகுகிறதா..? என்ன நடக்கும்..?
வங்கதேச கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Jan 2026 11:29 AM IST

2026 டி20 உலகக் கோப்பைக்கு (2026 T20 WorldCup) முன்னதாக, இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான கிரிக்கெட் உறவில் விரிசல் விழுந்துவிட்டதாக தெளிவாகத் தெரிகின்றன. சமீபத்திய நிகழ்வுகள் இந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இது இப்போது ஐசிசி போட்டியை நேரடியாகப் பாதித்து வருகிறது. வங்கதேசம் தனது போட்டிகளை இந்தியாவில் நடத்துவதில் தனக்கு உள்ள சிரமத்தை சுட்டிக்காட்டியுள்ளதுடன், போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பிரச்சனைகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ICC) மீண்டும் கடுமையான முடிவுகளின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.

ALSO READ: பிசிசிஐக்கு அதிர்ச்சி! வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்ற ஐசிசி! போட்டி இடம் மாற்றமா?

சர்ச்சை எப்படி தொடங்கியது?

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இந்தியாவில் கணிசமான கோபம் உள்ளது. இந்த சூழ்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை வாங்கியதும் பரவலான எதிர்ப்புகளைத் தூண்டியது. சமூக ஊடகங்களில் அதிகரித்த அழுத்தத்தைத் தொடர்ந்து, பிசிசிஐ கொல்கத்தா அணிக்கு நீக்க உத்தரவுகளை பிறப்பித்தது, இறுதியில் கேகேஆர் முஸ்தாபிசுரை விடுவிக்க வேண்டியிருந்தது. இந்த முடிவு நிலைமையை மேலும் மோசமாக்கியது.

ஐ.சி.சி-யிடம் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

  1.  முதல் பாய்ண்ட் –  வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்று, அதன் அனைத்து போட்டிகளையும் இலங்கையில் நடத்த திட்டமிடலாம். இது போட்டி அட்டவணையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் தள்ளும்.
  2. இரண்டாவது பாய்ண்ட் – ஐ.சி.சி அட்டவணையில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது. இந்த நிலையில், வங்கதேசம் இந்தியாவுக்கு பயணம் செய்ய மறுத்தால், அதன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கலாம். இதன்மூலம், வங்கதேசத்திற்கு எதிராக விளையாட இருந்த எதிரணி அணிகளுக்கு வாக் ஓவர் மூலம் புள்ளிகளைப் பெறலாம். இது கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு நடந்துள்ளது. 1996 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையில் விளையாட மறுத்துவிட்டனஇதன் விளைவாக இலங்கைக்கு நேரடியாகப் புள்ளிகள் வழங்கப்பட்டன. 2003 உலகக் கோப்பையில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளும் சில போட்டிகளைத் தவிர்த்துவிட்டன. இதனால் எதிரணி அணிகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன.

வங்கதேசம் போட்டியில் இருந்து விலகினால் என்ன செய்வது?

வங்கதேசம் முழு டி20 உலகக் கோப்பையிலிருந்தும் விலக முடிவு செய்தால் மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், ஐசிசி மற்றொரு தகுதிவாய்ந்த அணியை உலகக் கோப்பைக்குள் கொண்டு வரலாம். முன்னதாக, 2016ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையின்போது, ஆஸ்திரேலியா விலகியநிலையில், அயர்லாந்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ALSO READ: 2026ம் ஆண்டுக்கான வங்கதேச சுற்றுப்பயணம்.. இந்திய அணியின் அட்டவணை வெளியீடு!

வங்கதேசம் இன்னும் அதிகாரப்பூர்வமாக டி20 உலகக் கோப்பையிலிருந்து விலக முடிவு செய்யவில்லை. ஆனால் அவர்களின் நிலைப்பாடு ஐசிசியின் முடிவை பொறுத்து மாறலாம். இந்த சிக்கலான பிரச்சினையில் ஐசிசி என்ன முடிவு எடுக்கிறது என்பதைப் பார்க்க அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.