Ro-Ko ODI Series: ஒருநாள் போட்டியை ரோஹித் – கோலிக்காக அதிகரிக்க வேண்டும்.. பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த இர்ஃபான் பதான்!
Virat Kohli and Rohit Sharma: விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 2024ம் ஆண்டு டி20 போட்டிகளில் இருந்தும், 2025ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தனர். இருப்பினும், இருவரும் தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இவர்களது பார்ம் அற்புதமாகவும் இருந்து வருகிறது.
விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மாவுக்கு அதிக ஒருநாள் போட்டிகளை வழங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கோரிக்கை வைத்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 2024ம் ஆண்டு டி20 போட்டிகளில் இருந்தும், 2025ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தனர். இருப்பினும், இருவரும் தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர். இதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான இவர்களது பார்ம் அற்புதமாகவும் இருந்து வருகிறது. தற்போது, ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் ரோஹித் சர்மா முதலிடத்திலும், விராட் கோலி 2வது இடத்திலும் உள்ளனர். இந்தநிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
ALSO READ: 2026ல் ரோஹித் – கோலி எத்தனை சர்வதேச போட்டிகளில் விளையாடுவார்கள்..? முழு விவரம் இங்கே!




இர்ஃபான் பதான் கூறியது என்ன..?
Irfan Pathan “Why can’t we have 5 ODIs instead of 3? Why can’t we have a triangular or quadrangular series? Why can’t we arrange that, because these two greats play only one format? It won’t be wrong to say that if a lot of interest has returned to ODI cricket, these two have… pic.twitter.com/eH0iQnInXX
— Sujeet Suman (@sujeetsuman1991) January 2, 2026
இந்திய அணியின் ஒருநாள் போட்டிகள் குறித்து பேசிய இர்ஃபான் பதான் கூறுகையில், “அதனால்தான் நான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்திய அணிக்கு 3 போட்டிகளுக்கு பதிலாக 5 ஒருநாள் போட்டிகளை ஏன் நடத்த முடியாது? ஏன் ட்ரை சீரிஸ் அல்லது ஃபோர் சீரிஸ் நடத்தக்கூடாது. ரோஹித் மற்றும் கோலி போன்ற 2 சிறந்த வீரர்களும் ஒரே வடிவத்தில் மட்டுமே விளையாடுவதால், அதை ஏன் நடத்தக்கூடாது?
ALSO READ: ரோஹித், கோலியை காண ஆவல்! 8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்..!
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதுதான் மிகப்பெரிய விஷயம். 2027 ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற இன்னும் வெகு நாட்கள் இருந்தாலும், அதை பற்றி இப்போதே சிந்திப்பது முக்கியம். அதுவரை நாம் அவர்களை எவ்வளவு அதிகமாக பார்க்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்றும் நான் நினைக்கிறேன். இந்த 2 வீரர்களும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும். அதேநேரத்தில், ரோஹித் மற்றும் கோலி இந்தியாவுக்காக விளையாடாதபோது, அவர்கள் தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாட வேண்டும். ஏனென்றால், அவர்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறார்களோ, அவ்வளவு சிறப்பாக செயல்படுவார்கள்” என்றார்.