Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ind vs nz ODI series: திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயர்.. நியூசிலாந்து எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு!

India’s Squad for ODI Series: ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்ப்பதன் மூலம், இந்தத் தொடரில் அவர் பங்கேற்பது முற்றிலும் அவரது உடற்தகுதியைப் பொறுத்தது என்பதை இந்திய வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. பிசிசிஐயின் சிறப்பு மையத்திலிருந்து அவருக்கு இன்னும் உடற்தகுதி அனுமதி கிடைக்கவில்லை.

ind vs nz ODI series: திரும்பிய ஷ்ரேயாஸ் ஐயர்.. நியூசிலாந்து எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு!
ஷ்ரேயாஸ் ஐயர் - சுப்மன் கில்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 03 Jan 2026 18:22 PM IST

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) இந்திய அணிக்கு அணிக்குத் திரும்பியுள்ளார். அதே நேரத்தில் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சேர்க்கப்படவில்லை. மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டனாக பதவியேற்ற சுப்மன் கில், மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார். இதுமட்டுமின்றி, ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டியும் அணியில் இடம் பெற்றுள்ளார்.

ALSO READ: இந்தியா-நியூசிலாந்து ஒருநாள் தொடர் எப்போது தொடங்குகிறது..? முழு அட்டவணை இங்கே!

ஷ்ரேயாஸ் ஐயர் முழுமையாக விளையாடுவாரா..?

ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் சேர்ப்பதன் மூலம், இந்தத் தொடரில் அவர் பங்கேற்பது முற்றிலும் அவரது உடற்தகுதியைப் பொறுத்தது என்பதை இந்திய வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. பிசிசிஐயின் சிறப்பு மையத்திலிருந்து அவருக்கு இன்னும் உடற்தகுதி அனுமதி கிடைக்கவில்லை. அதன்படி, வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி விஜய் ஹசாரே டிராபி போட்டிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் முழுமையாக உடல் தகுதி பெறவில்லை என்றால், அவர் அணியிலிருந்து வெளியேறக்கூடும்.

ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பியதால் நீக்கப்பட்ட கெய்க்வாட்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் 4வது இடத்தில் சதம் களமிறங்கி, சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி சதம் அடித்தார். சதம் அடித்த பிறகு அணியில் இருந்து நீக்கப்பட்டது கெய்க்வாடுக்கு சற்று துரதிர்ஷ்டவசமானது. இந்தநிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் 3 ஆல்ரவுண்டர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 விக்கெட் கீப்பர்கள் மற்றும் 6 பேட்ஸ்மேன்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி , கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்)*, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ALSO READ: 2026ம் ஆண்டுக்கான வங்கதேச சுற்றுப்பயணம்.. இந்திய அணியின் அட்டவணை வெளியீடு!

இந்தியா vs நியூசிலாந்து: ஒருநாள் தொடர் அட்டவணை

  • 2026 ஜனவரி 11: முதல் ஒருநாள் போட்டி, வதோதரா
  • 2026 ஜனவரி 14: 2வது ஒருநாள் போட்டி, ராஜ்கோட்
  • 2026 ஜனவரி 18: மூன்றாவது ஒருநாள் போட்டி, இந்தூர்