Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

OTT Movies: வசூலில் டாப்… சிறந்த த்ரில்லர் கதை.. இந்த படம் பாருங்க!

ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கிய 2001 ஆம் ஆண்டு வெளியான Ocean's Eleven படம், நெட்ஃபிளிக்ஸில் காணக் கிடைக்கும் ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு படமாகும். ஜார்ஜ் குளூனி, பிராட் பிட் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்த இந்தப் படம், மூன்று கேசினோக்களில் கொள்ளையடிக்கும் திட்டத்தை மையமாகக் கொண்டது.

OTT Movies: வசூலில் டாப்… சிறந்த த்ரில்லர் கதை.. இந்த படம் பாருங்க!
Ocean Eleven படம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 May 2025 16:34 PM

சினிமா என்பது மனிதர்களின் உணர்வுகளுடன் கலந்து விட்ட ஒன்று என சொல்லலாம். போரடிக்காமல் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் பலரின் விருப்பம் விதவிதமான சினிமா பார்க்கலாம் என்பதாக இருக்கலாம். ஓடிடி தளங்கள் பெருகிவிட்ட நிலையில் பல மொழி படங்களையும் நாம் எளிதாக காண முடிகிறது. அந்த வகையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருக்கும் Ocean’s Eleven படத்தைப் பற்றி காணலாம். இது 2001 ஆம் ஆண்டு வெளியான படம் என்றாலும் இன்றைக்கு பார்த்தாலும் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும். இந்த படத்தின் குழு, கதை மற்றும் பல சிறப்புகள் பற்றி நாம் காணலாம்.

Ocean’s Eleven படம்

2001 ஆம் ஆண்டு ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கிய Ocean’s Eleven படமானது ஒரு திருட்டை அடிப்படையாக கொண்ட கதையாகும். இதேபெயரில் 1960 ஆம் ஆண்டு ஒரு படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தில் ஜார்ஜ் குளூனி,மேட் டாமன், ஆன்டி கார்சியா, பிராட் பிட் , ஜூலியா ராபர்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பீட்டர் ஆண்ட்ரூஸ் ஒளிப்பதிவு செய்த நிலையில், டேவிட் ஹோம்ஸ் இசையமைத்திருந்தார். இப்படம் அந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்தது.

படத்தின் கதை என்ன?

தொழில்முறை திருடனான ஜார்ஜ் குளூனி நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குப் பிறகு நியூ ஜெர்சி சிறையில் இருந்து வெளியே வருகிறான். அவன் தன்னுடைய முன்னாள் கூட்டாளியான பிராட் பிட் உடன் சேர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்கிறான். அங்கு இருவரும் தங்களுடைய மற்றொரு கூட்டாளியான எலியட் கோல்டை சந்திக்கின்றனர். எதற்காக என்றால் ஆன்டி கார்சியாவின் மூன்று கேசினோக்களில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் அந்த சந்திப்பு நடக்கிறது. ஏற்கனவே எலியட்டுக்கு கார்த்தியாவுடன் தொழில் பகை இருக்கிறது. இதனால் ஜார்ஜ் குளூனி நிதி அளிக்க ஒப்புக்கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்த திருட்டை சரியாக செய்வதற்கு எட்டு பேர் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு முழுமையாக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் கேசினோக்களுக்கு சென்று அதன் தகவல்களை சேகரித்து திருட்டை நிறைவேற்றுவதற்கான திட்டத்திற்கு பணிகள் ஒதுக்கப்படுகிறது. இறுதியாக இந்த திட்டம் நிறைவேறியதால் இல்லையா என்பதை இந்த படத்தின் கதை ஆகும்.

கேசினோக்களில் நடக்கும் கதை என்பதால் 5 நடிகர்கள் இதில் கேமியோ ரோலில் தோன்றினர். நடிகர்கள் தொடங்கி கதை வரை பலமுறை மாற்றம் நடைபெற்று ஒருவழியாக இந்த படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது. வாய்ப்பு இருப்பவர்கள் வீக்கெண்டை கொண்டாட இந்த படத்தைக் காணலாம்.