Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

என் மனைவியே காரி துப்பிட்டா.. நடிகர் விமல் சொல்வது என்ன படம் தெரியுமா?

நடிகர் விமல் தான் நடித்த படமான "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" படத்தின் காட்சிகளைப் பார்த்து மனைவி டென்ஷனானதாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் சில காட்சிகள் அவரது மனைவியை மிகவும் பாதித்ததாகவும், அதன் பின்னர் அத்தகைய படங்களில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் கூறியுள்ளார்.

என் மனைவியே காரி துப்பிட்டா.. நடிகர் விமல் சொல்வது என்ன படம் தெரியுமா?
நடிகர் விமல்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 May 2025 12:18 PM

என்னுடைய ஒரு படத்தைப் பார்த்து விட்டு மனைவி காரி துப்பிவிட்டார் என நடிகர் விமல் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதனைப் பற்றிக் காணலாம். தமிழ் சினிமாவில் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த விமல், பசங்க படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து களவாணி படத்தின் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதன்பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு, வாகை சூடவா, தூங்கா நகரம், தேசிங்கு ராஜா, மூன்று பேர் மூன்று காதல், புலிவால், மஞ்சப்பை என பல ஹிட் படங்களில் நடித்தார். பல படங்கள் அவருக்கு சரியாக போகாவிட்டாலும் இன்றைக்கும் ஓராண்டில் அதிகம் படம் நடிக்கும் பிரபலங்களில் விமலும் ஒருவர்.

மனைவியை டென்ஷனாக்கிய விமல்


இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் விமலிடம், நீங்கள் திரைத்துறையில் நிறைய ஹீரோயின்களுடன் நடித்துள்ளீர்கள். உங்களுடைய ஃபேவரைட் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நான் எந்தெந்த படத்தில் நடிக்கிறேனோ அந்த படத்தில் இடம்பெறும் ஹீரோயின்களுடன் எனக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒத்துப் போகும் என கூறினார். தொடர்ந்து, நீங்கள் எந்த ஹீரோயின் உடன் நடித்தால் நன்றாக இருக்கும் என உங்கள் மனைவி கூறியிருக்கிறாரா? என அடுத்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த விமல், என்னுடைய மனைவி அதைப்பற்றி எல்லாம் பேச மாட்டார்கள். நான் நடித்த படத்தை பார்ப்பார்கள் நன்றாக இருக்கிறது, இல்லை என கருத்து தெரிவிப்பார்கள். ஹீரோயின்களுடன் நான் கட்டிப்பிடித்து முத்தமிடும் காட்சிகள் இடம் பெற்றால் என்னை ஒரு பார்வை பார்ப்பார். இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படத்தை பார்த்துவிட்டு, துப்பி விட்டு சென்று விட்டார். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும்.

அந்த வகையில் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற படம் இனிமேல் இப்படிப்பட்ட படத்தை பண்ணக்கூடாது என கற்றுக் கொடுத்தது. எனக்கு இருந்த சூழல் காரணமாக ஒரு காலகட்டத்தில் நான் அப்படிப்பட்ட படம் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் அவுட்புட் இப்படித்தான் வரும் என தெரியாது.

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் 

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏஆர் முகேஷ் இயக்கத்தில் விமல், ஆஸ்னா சவேரி, சிங்கம்புலி, ஆனந்தராஜ், பூர்ணா, மன்சூர் அலிகான், காதல் கந்தாஸ் சுஜாதா, என பலரும் நடித்த படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. நடராஜன் சங்கரன் இசையமைத்த இந்த படம் முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் காட்சிகளுடன் எடுக்கப்பட்டிருந்தது. இதனால் நடிகர் விமல் அவரது ரசிகர்களிடத்தில் கடும் கண்டனத்திற்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.