Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மிஸ்ஸான அஜித் படம்.. வருத்தப்பட்ட விஜய் பட நடிகை.. யாருன்னு தெரியுதா?

நடிகை அஞ்சு அரவிந்த், அஜித் குமார் நடித்த 'காதல் கோட்டை' படத்தில் நடிக்க வேண்டியிருந்ததாகவும், அந்த வாய்ப்பு தவறவிட்டதாகவும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த வாய்ப்பை இழந்ததில் வருத்தம் இல்லை என்றும், தனது வாழ்க்கையில் நமக்கென எழுதப்பட்டது தான் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மிஸ்ஸான அஜித் படம்.. வருத்தப்பட்ட விஜய் பட நடிகை.. யாருன்னு தெரியுதா?
அஞ்சு அரவிந்த்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 May 2025 14:07 PM

நடிகர் அஜித்குமார் (Ajithkumar) நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டடித்த காதல் கோட்டை படத்தில் தான் ஹீரோயினாக நடிக்க வேண்டியது என பிரபல நடிகை அஞ்சு அரவிந்த் (Anju Aravind) நினைவுகளை பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “காதல் கோட்டை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டியது நான் தான். ஆனால் அந்த வாய்ப்பு பறிபோனதை நினைத்து நான் வருத்தப்படவில்லை. காரணம் நம்முடைய தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும். கொஞ்ச நாள் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமே என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இப்போது கிடையாது. நான் நிறைய முறை காதல் கோட்டை படம் பார்த்திருக்கிறேன். எனக்கு அந்த படம் அஜித் தான் பண்ணப்போகிறார் என தெரியாது. ஒருவேளை தெரிந்திருந்தால் கண்டிப்பாக தேதியை அட்ஜஸ்ட் செய்து அப்படத்தில் நடித்திருப்பேன். அந்த படத்தில் நடித்திருந்தால் சினிமாவில்  அடுத்த லெவலுக்கு வந்து விடுவேன் என நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை. காதல் கோட்டை படத்தின் இயக்குநர் அகத்தியன் என்னிடம் முழு கதையையும் சொல்லவில்லை. அதேசமயம் பார்க்காமலேயே காதல் என்ற ஒன்லைனை மட்டும் சொன்னார்” என அஞ்சு அரவிந்த் தெரிவித்திருக்கிறார்.

காதல் கோட்டை படம்


1996 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் தான் காதல் கோட்டை. அகத்தியன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தேவயானி ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் ஹீரா, கரண், மணிவண்ணன், பாண்டு, ராஜா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். கடிதம் மூலம் பார்க்காமலேயே காதல் என்ற கருவை வைத்து படம் முழுக்க ஹீரோ ஹீரோயின்கள் சந்திக்காமல் இறுதிக்காட்சியில் சந்தித்து காதலை வெளிப்படுத்தும் வகையிலான திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. வித்தியாசமான காதல் படங்களின் பட்டியலில் காதல் கோட்டை படத்திற்கு நிச்சயம் இடம் உண்டு. மேலும் அஜித் தேவயானி ஹீரா உள்ளிட்ட பலரின் வாழ்க்கையிலும் அந்த படம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என சொல்லலாம்.

அஞ்சு அரவிந்த் சினிமா கேரியர்

விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் அஞ்சு அரவிந்த். தொடர்ந்து ஒன்ஸ்மோர், வானத்தைப்போல, எனக்கொரு மகன் பிறப்பான், அருணாச்சலம், உதவிக்கு வரலாமா, ஆசைத்தம்பி, உன்னருகே நானிருந்தால், வாஞ்சிநாதன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். மலையாளத்திலும் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஞ்சு அரவிந்த் இன்றளவும் பூவே உனக்காக படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பழைய கார் வாங்க கடன் கிடைக்குமா? எப்படி விண்ணப்பிப்பது?
பழைய கார் வாங்க கடன் கிடைக்குமா? எப்படி விண்ணப்பிப்பது?...
சம்மரில் கூலா சாப்பிடுங்க: மட்கா ஃபிரினி வீட்டில் செய்வது எப்படி?
சம்மரில் கூலா சாப்பிடுங்க: மட்கா ஃபிரினி வீட்டில் செய்வது எப்படி?...
சென்னையில் 129% கோடை மழை.. IMD தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்!
சென்னையில் 129% கோடை மழை.. IMD தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்!...
ஓராண்டை நிறைவு செய்த கருடன்.. சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!
ஓராண்டை நிறைவு செய்த கருடன்.. சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!...
கங்காருவுடன் விமானத்தில் ஏற முயன்ற பெண்? - வைரல் வீடியோ!
கங்காருவுடன் விமானத்தில் ஏற முயன்ற பெண்? - வைரல் வீடியோ!...
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மாற்றம்.. புதிய விதிகள் அறிமுகம்!
டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மாற்றம்.. புதிய விதிகள் அறிமுகம்!...
வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பது எப்படி? - இதோ வழிமுறைகள்!
வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பது எப்படி? - இதோ வழிமுறைகள்!...
ரஜினிகாந்த்தின் 'லால் சலாம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
ரஜினிகாந்த்தின் 'லால் சலாம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?...
ஜூன் 30 முதல் யுபிஐ விதிகளில் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம் !
ஜூன் 30 முதல் யுபிஐ விதிகளில் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம் !...
ராமதாஸ் நம் குலதெய்வம்.. தந்தையை புகழ்ந்த அன்புமணி ராமதாஸ்!
ராமதாஸ் நம் குலதெய்வம்.. தந்தையை புகழ்ந்த அன்புமணி ராமதாஸ்!...
சென்னை: எண்ணூரில் வீடுகளின் நிறமே மாறிய அவலம்.. காரணம் என்ன?
சென்னை: எண்ணூரில் வீடுகளின் நிறமே மாறிய அவலம்.. காரணம் என்ன?...