Anju Aravind: விஜய் ஹீரோயினா நீங்க?.. பூவே உனக்காக அஞ்சு அரவிந்தா இது!
அஞ்சு அரவிந்த், விஜய்யுடன் "பூவே உனக்காக" படத்தின் மூலம் அறிமுகமானவர். ஒரு மலையாளப் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்றும், தமிழ் சினிமாவில் நடிக்க தயங்கிய நிலையில் விக்ரமனின் நம்பிக்கையால் படத்தில் நடித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் பூவே உனக்காக படத்தின் வெற்றி தன்னை ஆச்சரியப்படுத்தியது எனவும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சில படங்கள் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபலங்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் அஞ்சு அரவிந்த் (Anju Aravind). விஜய் (Vijay) நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பூவே உனக்காக படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ஒன்ஸ்மோர், வானத்தைப்போல, எனக்கொரு மகன் பிறப்பான், அருணாச்சலம், வாஞ்சிநாதன், உதவிக்கு வரலாமா, உன்னருகே நானிருந்தால் என சில படங்களில் மட்டுமே நடித்தார். தற்போது திருமணமாகி பெங்களூருவில் வசித்து வரும் அஞ்சு அரவிந்த், சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் பூவே உனக்காக படத்தில் நடித்ததைப் பற்றி பேசியிருந்தார். அதனைப் பற்றி காணலாம்.
வாய்ப்பு கிடைத்த கதை
நான் நடித்த ஒரு மலையாள படத்தின் ஷூட்டிங் குருவாயூர் கோயிலில் நடந்தது. அப்போது சூப்பர் குட் அலுவலகத்தில் இருந்து போட்டோ ஷூட் எடுக்க என்னுடைய தோழியை அணுகினர். அவளுக்கு உதவிக்காக நான் போனேன். அப்போது என்னைப் பார்த்து என்னுடைய அப்பாவிடம் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என கேட்டனர். அடுத்த நாள் எனக்கும் போட்டோஷூட் நடந்தது. அதன்பிறகு நான் நடித்த அந்த படத்தின் ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. அங்கு வந்து பூவே உனக்காக படத்தின் கதையை விக்ரமன் சொன்னார். அதற்கு முன்னால் வரை தமிழ் சினிமாவெல்லாம் பார்த்திருக்கிறேன். அதனால் எனக்கென ஒரு கட்டுப்பாடு இருப்பதால் நான் நடிக்க முடியாது என சொல்லி விட்டேன். விக்ரமன் என்னிடம், இது ஃபேமிலி கதை. விஜய் கூட நடிக்க வேண்டும் என சொன்னார். விஜய்யுடன் எப்படி என்னால் ஈடுகொடுத்து நடிக்க முடியும் என கேட்டேன்.
கடவுள் அருளால் தான் பூவே உனக்காக மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதனை நானும் எதிர்பார்க்கவில்லை. மலையாள சினிமாவில் கூட யாரும் நினைத்து பார்க்கவே இல்லை. சமீபத்தில் நான் கேரளாவில் ஒரு ஷூட்டிங்கிற்கு சென்றிருந்தேன். அப்போது இப்போது உள்ள குழந்தைகள் முதலில் என்னைப் பார்த்து சாதாரணமாக கடந்து சென்றார்கள். நான் 90ஸ் ஹீரோயின் என்பதால் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என நானும் எதுவும் நினைக்கவில்லை.
விஜய் ஹீரோயினா நீங்க?
View this post on Instagram
சிறிது நேரத்தில் கூட்டம் கூட்டமாக வந்து என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். அப்போது விஜய் ஹீரோயினா நீங்க? என அவர்கள் கேட்டது, ரொம்ப சந்தோஷமா இருந்தது. பூவே உனக்காக முடித்த பிறகு விஜய்யுடன் ஒன்ஸ்மோர் படம் நடித்தேன். இதற்கிடையில் பூவே உனக்காக படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அப்போதெல்லாம் இப்போது பேசும் அளவுக்கு தமிழ் பேச மாட்டேன். அந்த நிகழ்ச்சியில நான் பேச வேண்டியது எல்லாம் சங்கீதா பேசினார்.
பூவே உனக்காக படத்தின் டைட்டில் ரோல் நீங்கள் தான் பண்ண போறீங்க என விக்ரமன் சொல்லவே இல்லை. அவர் கிளைமேக்ஸ் என்ன நடக்கும் என்பதே சொல்லவில்லை. படம் பார்த்த பிறகு தான் எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த படத்துக்கு 2 கிளைமேக்ஸ் எடுத்திருந்தார்கள்” என தெரிவித்தார். இதற்கிடையில் விஜய்யின் வளர்ச்சி மிகப்பெரியது. நடுவில் அவரை மீட் பண்ண ரொம்ப மெனக்கெட்டேன். ஆனால் முடியவில்லை என அஞ்சு கூறியிருந்தார்.