OTT Movies: அட்டகாசமான திரைக்கதை.. கடைசி வரை ட்விஸ்ட்.. இந்த படம் தெரியுமா?
Best OTT Movies: ஜெரார்ட் பட்லர் நடித்த "லாஸ்ட் சீன் அலைவ்" திரில்லர் படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி அதிக ரசிகர்களை கவர்ந்த படங்களில் ஒன்றாகும். கணவனின் மனைவி காணாமல் போனதையடுத்து நிகழும் நிகழ்வுகளையும், அதைத் தொடர்ந்து நடக்கும் துப்பறியும் முயற்சிகளையும் படம் விறுவிறுப்பாகக் காட்டும் திரைக்கதை ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.

ஓடிடி தளங்கள் (OTT Platforms) பெருகி விட்ட நிலையில் நம்மால் மற்ற மொழி திரைப்படங்களையும் எளிதாக பார்க்க முடிகிறது. அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ தமிழ், சோனி லைவ் என ஏகப்பட்ட ஓடிடி தளங்கள் சினிமா ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற “Last Seen Alive” என்ற படத்தைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். பிரையன் குட்மேன் இயக்கிய இப்படத்தில் ஜெரார்ட் பட்லர்,ஜெய்மி அலெக்சாண்டர், ரஸ்ஸல் ஹார்ன்ஸ்பி,ஈதன் எம்ப்ரி,மைக்கேல் இர்பி,புரூஸ் ஆல்ட்மேன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பீட்டர் ஹாலண்ட் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சாம் எவிங் இசையமைத்திருந்தார். இந்த படம் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் காண கிடைக்கிறது.
படத்தின் கதை
ரியல் எஸ்டேட் முகவரான ஜெரார்ட் பட்லர் தனது மனைவி ஜெய்மி அலெக்சாண்டருடன் காரில் பயணம் மேற்கொள்கின்றனர். இருவரும் ஜெய்மியின் பெற்றோர் வீட்டுக்கு செல்கின்றனர். வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்புவதற்காக கார் நிறுத்தப்படுகிறது. அப்போது அங்கிருக்கும் ஒரு கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க ஜெய்மி செல்கிறார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதனால் பதட்டமடையும் ஜெரார்ட் பட்லர் பெட்ரோல் பங்க் சுற்றியிருக்கும் பகுதி முழுக்க தேடுகிறார்.




மனைவியை கண்டுபிடிக்க தனிப்பட்ட உடைமைகளைத் தவிர எந்த வழியும் இல்லாத நிலையில் காணாமல் போனவர்கள் குறித்து புகார் செய்யும் எண்ணுக்கு அழைக்கிறார். ஜெரார்ட்டுக்கு உதவ ரஸ்ஸல் ஹார்ன்ஸ்பி வருகிறார். ஆனால் அதற்குள் ஜெரார்ட் ஜெய்மி வீட்டுக்கு சென்று அவருடைய நண்பர்கள், தெரிந்தவர்கள் பற்றி விசாரிக்கிறார். இதனைத் தொடர்ந்து கதை பிளாஸ்பேக்கில் செல்கிறது. ஜெரார்ட் பட்லர் – ஜெய்மி இடையே என்ன பிரச்னை?, காணாமல் போனவரை ரஸ்ஸல் ஹார்ன்ஸ்பி துப்பறிந்து எப்படி கண்டறிந்தார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
விறுவிறு திரைக்கதை
Last Seen Alive (2022)
Butler’s movies are not a disappointment. Good to watch. #Movies #SeenOnScreen68 🎬🎬 pic.twitter.com/RRuASsl2IV
— eranga tennakoon (@erangatennakoon) May 13, 2025
இந்தப் படம் சேஸ் என்ற தலைப்பில் தான் முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் Last Seen Alive என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய இந்த படம் தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அளவுக்கு திரைக்கதையில் அசத்தலாக இருக்கிறது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். வாய்ப்பிருந்தால் இந்த படத்தைப் பார்த்து மகிழுங்கள்.