Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

OTT Movies: பாபநாசம் ஸ்டைலில் ஒரு படம்.. ஓடிடியில் மிஸ் பண்ணாமல் பாருங்க!

Mystery Thriller Movies: 2021-ல் வெளியான "மை சன்" திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. ஜேம்ஸ் மெக்காவோய் நடித்த இப்படம், காணாமல் போன மகனைத் தேடும் தந்தையின் கதையை மிகுந்த ட்விஸ்ட்களுடன் சொல்கிறது. முன்னாள் மனைவி, காதலன் என பலரின் மீது சந்தேகம் விழுந்தாலும், கடைசியில் எதிர்பாராத திருப்பம் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.

OTT Movies: பாபநாசம் ஸ்டைலில் ஒரு படம்.. ஓடிடியில் மிஸ் பண்ணாமல் பாருங்க!
My Son படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 12 Jun 2025 08:30 AM

சினிமாவைப் பொறுத்தவரை ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் இருக்கும் படங்களைப் பார்த்தால் யாருக்கு தான் பிடிக்காமல் போகும். இரண்டு மணி நேரம் பார்க்கும் சினிமாவில் போர் அடிக்காமல் நம்மை கவர்ந்திழுக்கும் திரைக்கதை இருந்தால் எந்த மொழி படம் என்றாலும் ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள். கலைக்கு மொழி பேதம் என்பது கிடையாது. இப்படியான நிலையில் அப்படி ட்விஸ்ட்கள் நிறைந்த ஒரு படத்தைப் பற்றி நாம் பார்ப்போம். இந்த படம் 2021 ஆம் ஆண்டு My Son என்ற பெயரில் வெளியானது. கிறிஸ்டியன் கேரியன்  எழுதி இயக்கிய இப்படத்தில் ஜேம்ஸ் மெக்காவோய் (James McAvoy),கிளேர் ஃபோய்,டாம் கல்லன்,கேரி லூயிஸ் என பலரும் நடித்திருந்தனர். எரிக் டுமாண்ட் ஒளிப்பதிவு செய்த My Son படத்திற்கு லாரன்ட் பெரெஸ் டெல் மார் இசையமைத்தார். இப்படம் அமேசான் பிரைம் (Amazon Prime) ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

படத்தின் கதை

ஜேம்ஸ் மெக்காவோய் தனது மகன் மேக்ஸ் வில்சனை தொலைத்து விடுகிறார். இதனிடையே அவர் மகன் காணாமல் போன இடத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்படுகிறார். அங்கு கிளேர் ஃபோய் எனப்படும் தனது முன்னால் மனைவி ஜோனை சந்தித்து மகன் காணாமல் போனதற்கு ஆறுதல் கூறுகிறார். விசாரணைக்கு செல்லும் தேடல் குழுவில் இணைந்து ஜேம்ஸ் மெக்காவோய் பணியாற்றுகிறார். இன்ஸ்பெக்டர் கேரி லூயிஸ் விசாரணைக்குப் பின் வெளியே வரும் ஜேம்ஸ் மெக்காவோய், கிளேர் ஃபோயின் இன்னாள் காதலனான டாம் கல்லனை சந்திக்கிறார். இருவரும் பேச தொடங்கும் சமயத்தில் தன்னுடைய மகன் காணாமல் போனதற்கு டாம் தான் காரணம் என ஜேம்ஸ் சந்தேகப்படுகிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் கேரிக்கு கிளேர் மீது சந்தேகம் வருகிறது. இருவரும் களத்தில் இறங்க, கடைசியில் மகன் கடத்தப்பட்ட விஷயத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது. இதுதான் இப்படத்தின் கதையாகும்.

படத்தின் சிறப்புகள்

இந்தப் படம் விமர்சகர்களிடமிருந்து காட்சிகளில் கூடுதல் அழுத்தம் தேவை என்ற கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் திரைக்கதை பாராட்டைப் பெற்றிருந்தது. இப்படத்தின் இயக்குநரான கிறிஸ்டியன் கேரியன் 2017 ஆம் ஆண்டு இந்த படத்தினை பிரெஞ்சு மொழியில் மோன் கார்சன் நடிக்க இயக்கி வெற்றி கண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே ஆங்கில மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது ஹீரோவான ஜேம்ஸ் மெக்காவோய்க்கு கதை சொல்லப்படாமல் நடிக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது. வாய்ப்பு இருப்பவர்கள் ஓடிடி தளத்தில் இந்த படம் பார்க்கலாம்.

Tamil Nadu Weather : அடுத்த 4 நாட்களுக்கு கனமழை.. வெதர்மேன்
Tamil Nadu Weather : அடுத்த 4 நாட்களுக்கு கனமழை.. வெதர்மேன்...
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை..
வரலாறு காணாத உச்சத்தை தொட்ட தங்கம் விலை.....
"காமராஜர் என அழைக்க வேண்டாம்" கறாராக சொன்ன தவெக தலைவர் விஜய்!
பத்தாம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..
பத்தாம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.....
அகமதாபாத் விமான விபத்து.. பிரதமர் மோடி நேரில் ஆய்வு
அகமதாபாத் விமான விபத்து.. பிரதமர் மோடி நேரில் ஆய்வு...
கடைசி வரை திக் திக்.. ஓடிடியில் பார்க்க வேண்டிய த்ரில்லான படம்!
கடைசி வரை திக் திக்.. ஓடிடியில் பார்க்க வேண்டிய த்ரில்லான படம்!...
தமிழ்நாடு அரசு விடுதிகளில் இலவசமாக தங்கி படிக்க வேண்டுமா?
தமிழ்நாடு அரசு விடுதிகளில் இலவசமாக தங்கி படிக்க வேண்டுமா?...
விமானத்தில் எங்கு அமர்ந்தால் உயிர் பிழைக்கலாம்? முழு விவரம்
விமானத்தில் எங்கு அமர்ந்தால் உயிர் பிழைக்கலாம்? முழு விவரம்...
3BHK படத்தில் நடிக்க ஓகே சொன்ன காரணம் அதுதான்- சித்தார்த்
3BHK படத்தில் நடிக்க ஓகே சொன்ன காரணம் அதுதான்- சித்தார்த்...
இந்திய ஒருநாள் அணிக்கு அடுத்த கேப்டன் யார்? பரிசீலிக்கும் பிசிசிஐ
இந்திய ஒருநாள் அணிக்கு அடுத்த கேப்டன் யார்? பரிசீலிக்கும் பிசிசிஐ...
ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் பதற்றம்
ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் பதற்றம்...