G.V.Prakash Kumar: ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள்.. அவரின் நடிப்பில் மிஸ் பண்ணக்கூடாத படங்கள்!
Happy Birthday GV Prakash:தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் அவரின் நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார் (G.V. Prakash Kumar). இவர் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி பின், இடங்களில் நடிகராகவும் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். நடிகர் ஜி.வி. பிரகாஷ் கடந்த 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதியில் சென்னையில் பிறந்தார். இவரின் சிறுவயதில் இருந்தே திரைப்படங்களின் பாடல்கள் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த 2006ம் ஆண்டு வெளியான வெயில் (Veyil ) என்ற படத்தின் மூலமாகத்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததுடன் படங்களிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றார்.
மேலும் நடிகராக இவருக்கு முதல் படமாக அமைந்தது டார்லிங் (Darling) திரைப்படம். கடந்த 2015ம் ஆண்டு இயக்குநர் சாம் ஆண்டனியின் இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார். இந்த படங்களைத் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், இன்று 2025, ஜூன் 13ம் தேதியில் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரின் நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டிய படங்கள் பற்றிப் பார்க்கலாம்.
நாச்சியார் :
நடிகர் ஜிவி. பிரகாஷ் குமாரின் மாறுபட்ட நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம்தான் நாச்சியார். இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர்கள் ஜிவி. பிரகாஷ், ஜோதிகா, இவானா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த நாச்சியார் படமானது ஒரு குற்றம் சார்ந்த கதைக்களத்துடன் மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறலாம்.
சிகப்பு மஞ்சள் பச்சை :
நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சித்தார்த் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம்தான் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த படத்தை இயக்குநர் சசி இயக்கியிருந்தார். இந்த படமானது அக்கா, தம்பி மற்றும் மாமா உறவுகளை மையப்படுத்திய மாறுபட்ட திரைக்கதைகளுடன் வெளியாகியிருந்தது. இந்த படமானது ஒரு பீல் குட் திரைப்படமாக அமைந்திருந்தது. ஜிவி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் வெளியான டாப் 5 ஹிட் படங்களில் இதுவும் ஒன்று, நிச்சயமாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இது இருக்கும்.
பேச்சுலர் :
கடந்த 2021ம் ஆண்டு இயக்குநர் சதீஸ் செல்வகுமாரின் இயக்கத்தில் நடிகர் ஜிவி. பிரகாஷ் குமார் நடித்திருந்த படம் பேச்சுலர். இந்த படமானது முழுவதும் காதல் மற்றும் ரொமான்டிக் கதைக்களத்துடன் இருக்கும். இந்த படத்தில் நடிகை திவ்யாபாரதி முன்னணி நாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது காதல் சார்ந்த ரொமாண்டிக் திரைப்படமாக இருக்கும். ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அடியே :
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் மற்றும் ஜிவி பிரகாஷ் குமாரின் நடிப்பில் வெளியான திரைப்படம் அடியே. கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படமானது முழுவதும் காதல் சார்ந்த சைன்ஸ் பிக்சன் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை கௌரி ஜி கிஷன் நடித்திருந்தார். இந்த படமானது காதல், நகைச்சுவை மற்றும் அறிவியல் புனைவு சார்ந்த படமாக வெளியாகியிருந்தது. இந்த படமும் ஜிவி. பிரகாஷ் குமாரின் நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்கவேண்டி படங்களில் ஒன்றாக இருக்கிறது.