Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth : கூலி படத்திற்குக் கிடைத்த முதல் விமர்சனம்.. எப்படி இருக்கு தெரியுமா?

Rajinikanth Coolie Movie First Review : தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராகப் பல கோடி ரசிகர்களின் அன்பைச் சேர்த்து வைத்திருப்பவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக அதிரடி கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் படம்தான் கூலி. இந்த படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனங்கள் பற்றிப் பார்க்கலாம்.

Rajinikanth : கூலி படத்திற்குக் கிடைத்த முதல் விமர்சனம்.. எப்படி இருக்கு தெரியுமா?
ரஜினிகாந்த் கூலி படம் Image Source: Social media
barath-murugan
Barath Murugan | Published: 14 Jun 2025 15:59 PM

தமிழ் சினிமாவில் தனது திரைப்படங்களின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்து வைத்திருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் லியோ (Leo). நடிகர் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay)  நடிப்பில் வெளியான படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவன் இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகியிருப்பது கூலி (coolie). இந்த படத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) அதிரடி நாயகனாக நடித்திருக்கிறார். இந்த கூலி படத்தின் அறிவிப்புகளானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியிலே வெளியானது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் 2024ம் ஆண்டு முதல் ஆரம்பமான நிலையில், கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்தது.

இந்த படமானது பான் இந்திய படமாக உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் வேலைகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கூலி படத்தை பார்த்து ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம் பற்றிக் கூறியுள்ளார்.

கூலி படம் பார்த்த ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம் :

அதிரடி கதைக்களம் படமாக அமைந்திருக்கும் இந்த கூலி படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், “படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. எனக்கும் மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறியதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபனாக கூறியிருந்தார்.

கூலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக உருவாகியிருப்பது இந்த கூலி படம். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியின் நடிப்பில் இறுதியாக வெளியான வேட்டையன் படத்திற்கும் இவர்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா எனப் பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் . மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கான் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தின் பட்ஜெட் ;

பான் இந்தியப் படமாக உருவாகிவரும் இந்த கூலி படத்தில், பல ஹிட் நடிகர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். மேலும் இது லோகேஷ் கனகராஜின் படம் என்பதால் நிச்சயமாக ஆக்ஷ்ன் காட்சிகள், அதிரடி சண்டைக்காட்சிகள் என நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். இந்த படமானது தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்த கூலி படமானது சுமார் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் 1 மாதம் மட்டும் இருக்கும் நிலையில், விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் போன்ற அப்டேட்டுகள் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!
கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!...
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....