Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Maaman : சூரியின் ‘மாமன்’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? அட இத்தனை கோடிகளா?

Maaman Movie Total Collection : சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்காத கதாபாத்திரத்தில் நடித்து, தொடர்ந்து நடிகர், துணை நடிகை மற்றும் நகைச்சுவை நடிகர் என அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்ந்தவர்தான் நடிகர் சூரி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் மாமன். இந்த படமானது வெளியாகி இதுவரை மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Maaman : சூரியின் ‘மாமன்’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? அட இத்தனை கோடிகளா?
சூரியின் மாமன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Jun 2025 11:13 AM

நடிகர் சூரி (Soori) சினிமாவில் தொடக்கத்தில் படங்களில் முக்கியமில்லாத கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து துணை நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி, தற்போது முன்னணி நடிகராகப் படங்களில் நடித்து வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாமன் (Maaman). இந்த படமானது கடந்த 2025, மே 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lekshmi) இணைந்து நடித்திருந்தார். மேலும் இப்படத்தைக் கோலிவுட் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prashanth Pandiaraj) இயக்கியிருந்தார். இவர் இப்படத்திற்கு முன் நடிகர் விமலின் விலங்கு என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் என்ன?

சூரியின் இந்த மாமன் படமானது வெளியாகி 31 நாட்களை கடந்த நிலையில், இதுவரை மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?. சூரியின் இந்த மாமன் படமானது மொத்தமாக சுமார் ரூ. 45 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த தகவலானது தினத்தந்தி செய்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

30ம் நாளுக்கு மாமன் படக்குழு வெளியிட்ட பதிவு :

மாமன் படத்தின் கதைக்களம் :

சூரியின் மாமன் படமானது முற்றிலும் கிராமத்து கதைக்களத்துடன் கூடிய திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் முக்கியமான கதை என்றால் படத்தின் டைட்டிலில் தெரிந்திருக்கும். தாய் மாமனின் முக்கிய பாச போராட்டமாக இந்த மாமன் படம் உருவாகியிருக்கிறது. மேலும் அக்கா மற்றும் தம்பியின் பாச கதைகளும் இப்படத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

இந்த மாமன் படத்தில் சூரியின் அக்கா கதாபாத்திரத்தில், லப்பர் பந்து படத்தில் நடித்துப் பிரபலமான நடிகை ஸ்வாசிகா நடித்திருந்தார். சூரியின் இந்த மாமன் படமானது முழுவதும் எமோஷனல் காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்தில் சூரி, ராஜ்கிரண், ஸ்வாசிகா, ஐஸ்வர்யா லட்சுமி, பாபா பாஸ்கர் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

சூரியின் புதிய படம் :

மாமன் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி, அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் பான் இந்தியப் படமாக உருவாகிவருவது மண்டாடி. இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநரான, புகழேந்தி மதிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தமிழில் ஹீரோவாகவும், தெலுங்கில் வில்லனாகவும் நடிகர் சூரி நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். அதிரடி ஆக்ஷ்ன் திரைப்படமாக உருவாகிவரும் இந்த மண்டாடி படமானது வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.