AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rajinikanth : ‘டூரிஸ்ட் பேமிலி’ படக் குழுவை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Rajinikanth Praised Tourist Family Crew : கோலிவுட் சினிமாவில் கடந்த 2025, மே மாதத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இந்நிலையில், இந்த படத்தின் குழுவினரையும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தையும், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெளியிட்டுள்ளார்.

Rajinikanth : ‘டூரிஸ்ட் பேமிலி’ படக் குழுவை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் மற்றும் அபிஷன் ஜீவிந்த்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Jun 2025 15:10 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2025, மே 1ம் தேதியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம்தான் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevinth) இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் சசிகுமார் (Sasikumar), சிம்ரன் (Simran) இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் ரிலீஸின் போதுதான் தமிழில் பிரம்மாண்ட படங்களான ரெட்ரோ (Retro) மற்றும் ஹிட் 3 (Hit3)போன்ற படங்கள் இணைந்து வெளியாகியிருந்தது. இந்த படமும் அதே நாளில் வெளியான நிலையில், வரவேற்பைப் பெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அந்த தேதியில் வெளியான மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாகவே வெற்றி பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்த இந்த டூரிஸ்ட் பேமிலி படக்குழுவைப் பல நடிகர்களும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்துடம் (Rajinikanth), இந்த படக்குழுவை அழைத்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான நெகிழ்ச்சி பதிவை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பதிவானது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. சிறு சிறு பட இயக்குநர்களைப் பாராட்டிவரும் ரஜினியின் தன்மையைப் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

ரஜினியைச் சந்தித்த தருணம் பற்றி அபிஷன் ஜீவிந்த் :

அந்த பதிவில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், “நான் சினிமாவில் காலடி எடுத்துவைக்கக் காரணம் இன்று நினைவாகியுள்ளது. ரஜினிகாந்த் சார் என பெயரைக் கூறி, அவர் என்னை கட்டிபிடித்த விதம்,  காரணமாக எனது உடலெல்லாம் புல்லரித்தது. அவரின் சிரிப்பைப் பார்க்கும்போது, நான் குழந்தையாக இருந்தபோது செய்த ஒவ்வொரு வேண்டுதல்களும் தாமதமாக வருவதை உணர்ந்தேன்.

ஆனால் அது எனக்குச் சரியான நேரத்தில்தான் வந்துள்ளது. ரஜினிகாந்த் சார் என்ன ஒரு மனிதன் அவர் ஒரு எளிமையின் சின்னம் என்று இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ரஜினிகாந்த்தைச் சந்தித்த தருணம் பற்றி எழுதியுள்ளார். மேலும் ரஜினியுடன் அவரின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தையும் சந்தித்தது பற்றியும் எழுதியுள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி பட வெற்றி :

நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரனின் முன்னணி நடிப்பில் வெளியான திரைப்படம் இந்த டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இந்த படமானது இலங்கை அகதி குடும்பம் எவ்வாறு தமிழகத்தில் வாழ்கிறது என்பது பற்றியும், அவர்களைச் சுற்றி நடக்கும் கஷ்டங்கள் பற்றியும் கொண்ட படமாக அமைந்திருந்தது. சுமார் ரூ. 14 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம் மொத்தமாக சுமார் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us