காந்தாரா படப்பிடிப்பில் படகு கவிழந்து விபத்து – தொடரும் விபத்துகளால் படக்குழுவினர் கலக்கம்
Kantara Shoot Accident : காந்தாரா படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது அதன் இரண்டாம் பாகம் காந்தாரா சாப்டர் 1 என்ற பெயரில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது வெவ்வேறு காரணங்களால் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஜூன் 15, 2025 அன்று காந்தாரா படப்பிடிப்பின் போது படகு கவிழந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிஷ்ப் ஷெட்டி (Rishab Shetty) இயக்கி நடித்த காந்தாரா (Kantara) படம் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னடத்தில் மட்டும் வெளியான படம் பின்னர் படத்துக்கு கிடைத்த வரவேற்பால் பிற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1) என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ரிஷப் ஷெட்டி தான் இயக்கி நடிக்கிறார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தப் படத்தில் பணியாற்றிய 3 பேர் எதிர்பாராத விதத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிடிஐயில் வெளியான செய்தியின் அடிப்படையில் கர்நாடகாவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது படகு திடீரென நீரில் கவிழ்ந்திருக்கிறது. படகில் ஹீரோ ரிஷப் ஷெட்டி உட்பட 30 பேர் இருந்திருக்கின்றனர். அப்பகுதியில் ஆழம் குறைவாக இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
விபத்து எப்படி நடந்தது?
கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவடத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் மெலினா கொப்பா என்ற நீர்த்தேக்க பகுதியில் படப்படிப்பு நடைபெற்றிருக்கிறது. அப்போது படகில் ஹீரோ ரிஷப் ஷெட்டி உட்பட 30 பேர் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அடித்த பலத்த காற்றினால் படகு நீரில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியில் ஆழம் குறைவு என்பதால் படகில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் கேமரா உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீர்த்தஹல்லி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.




காந்தாரா படப்பிடிப்பில் நடந்த விபத்து
Kantara 1 Tragedy : ಕಾಂತಾರ ಸುತ್ತ ಅವಾಂತರ, ಮುಂದಿದ್ಯಾ ಗಂಡಾಂತರ..! | Rishab Shetty | R.Kannada Explainer
.
.
.
WATCH #RepublicKannada LIVE: https://t.co/c4LtlT6bHu
.
.
.#adarsh #Kantara1 #kantara2controversy #sandalwood #rishabshetty #forestfire #kannadafilmindustry #smitharanganath… pic.twitter.com/8qSybdbHxU— Republic Kannada (@KannadaRepublic) June 15, 2025
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு படக்குழுவை சேர்ந்த ஒருவர் அளித்த பேட்டியில், “படகு கவிழ்ந்ததும் சிலர் பீதி அடைந்தனர். ஆனால் அது ஆழமில்லாத நீரில் ஏற்பட்டதால், அனைவரும் பாதுகாப்பாக நீந்தி கரையை எட்டிவிட்டோம். இது எங்களுக்கு ஒரு அதிர்ஷ்டமான தருணம் என்று பேசினார்.
தொடரும் விபத்துகளால் படக்குழுவினர் கலக்கம்
இந்த சம்பவம், ஏற்கனவே பல சிக்கல்களை சந்தித்து வரும் ‘காந்தாரா: Chapter 1’ படத்திற்குத் தொடர்ச்சியான இன்னொரு பின்னடைவாக இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்குள், இப்படத்தின் படக்குழுவில் சேர்ந்த மூன்று கலைஞர்கள், வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது படக்குழுவினர் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. படம் வருகிற அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டநிலையில் விபத்து போன்ற காரணங்களால் படப்பிடிப்பு முடிவடைவதற்கு தாமதமாகும் என்பதால் வெளியீடும் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.