Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kuberaa: அகமதாபாத் விமான விபத்து.. குபேரா படக்குழு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

Kuberaa Pre-Release Event Postponed : நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பில் தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் படம் குபேரா. இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது ரிலீசிற்கு காத்திருக்கிறது. இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி இன்று 2025, ஜூன் 13ம் தேதியில் நடைபெற இருந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஒத்திவைத்துள்ளது.

Kuberaa: அகமதாபாத் விமான விபத்து.. குபேரா படக்குழு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!
குபேரா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jun 2025 12:43 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ராயன் (Raayan). சன் பிக்ச்சர்ஸ் தயாரித்த இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி மற்றும், அவரே அதில் முன்னணி நாயகனாகவே நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று, அதிகமாக வசூல் செய்திருந்தது. இந்த படத்தின் ரிலீசை தொடர்ந்து இரு படங்களை தனுஷ் இயக்கியுள்ளார். மேலும் இப்படங்களைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநருடன் இணைந்து பணியாற்றிவந்த திரைப்படம்தான் குபேரா (Kuberaa). இந்த படத்தினை இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியுள்ளார். தனுஷின் முன்னணி நடிப்பில் தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்த குபேரா படமானது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது.

இந்த படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் விழா இன்று 2025, ஜூன் 13ம் தேதியில் நடைபெற இருந்த நிலையில், படக்குழு ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளது.

நேற்று 2025, ஜூன் 12ம் தேதியில் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து காரணமாக, குபேரா படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான எக்ஸ் பதிவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனால் படத்தின் ட்ரெய்லர் நிச்சமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.

குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

குபேரா ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி ஒத்திவைப்பு, ட்ரெய்லர் ரிலீசாகுமா ?

இன்று 2025, ஜூன் 13ம் தேதியில் குபேரா படத்தின் தெலுங்கு ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியானது நடைபெறவிருந்தது. இந்த நிகழ்ச்சியின் போதுதான் குபேரா படத்தின் ட்ரெய்லரையும் படக்குழு வெளியிடத் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தின் விபத்து காரணமாகவும், சோகத்தில் மூழ்கியிருக்கும் அவர்களின் குடும்பத்திற்காகவும் குபேரா படக்குழு இந்த ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியை ஒத்திவைத்திருக்கிறது.

இது தொடர்பான பதிவையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. ஆனால் படத்தின் ட்ரெய்லர் நிச்சயமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழு ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குபேரா திரைப்படம் :

தனுசனின் 51வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டதுதான் இந்த குபேரா. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகர் நாகார்ஜுனாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கிறார்.

இப்படத்தின் கதைக்களமானது அரசியல் கதைக்களத்துடன் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.