ரஜினிகாந்த்தின் கூலி டைம் டிராவல் படமா? டிரெய்லரில் இதை நோட் பண்ணீங்களா?
Rajinikanth's Coolie Trailer : கூலி படம் டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லரை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அது குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagarj) இயக்கத்தில் கூலி (Coolie) திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று நடைபெறவிருக்கிறது. படத்துக்கு தணிக்கைத் துறை A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2, 2025 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 3 நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லரில் ரசிகர்கள் பல விஷயங்களை கவனித்து பதிவிட்டு வருகின்றனர்.
கூலி டைம் டிராவல் படமா?
கூலி படத்தின் டிரெய்லரில் துவக்கத்தில் வயர் பொறுத்தப்பட்ட ஒரு சேர் காட்டப்படும். டிரெய்லரின் இன்னொரு இடத்தில் சத்யராஜ், ரஜினிகாந்த்திடம், உன்னை யார் இங்க வர சொன்னது என கேட்பார், இதனை ஒப்பிட்ட ரசிகர்கள் கூலி படம் டைம் டிராவல் படமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் படம் வெளியானால் தான் இது குறித்த உண்மை தெரிய வரும்.




இதையும் படிக்க: Coolie Trailer : என்னப்பா முடிச்சிரலாமா..! வெளியானது ரஜினியின் கூலி பட ட்ரெய்லர்!
கூலி படத்தின் டிரெய்லர்
For the eternal love we all have, this is from all of us to you, #Thalaivar @rajinikanth sir! ❤️❤️❤️https://t.co/QVmZlGM1G1#CoolieTrailer #Coolie
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 2, 2025
கூலி படத்தின் கதை இதுவா?
இந்த நிலையில் டைம் டிராவல் என்பதை நிரூபிக்கும் வகையில் கூலி படத்தின் கதை என சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வயதான கேங்ஸ்டர் ஒருவருக்கு, கடந்த காலத்தில் இறந்துபோன ஒருவரை மீண்டும் அழைத்து வர வேண்டும். ஏனெனில், அவரிடம் ஒரு முக்கிய தகவல் இருக்கிறது. அதனை வைத்து பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மிஷனை தடுக்க முடியும். ஒரு கடிகாரம் மூலம் அவர் கடந்த காலத்துக்கு டைம் டிராவல் செய்கிறார். ஆனால், அவர்கள் கடந்த காலத்துக்குச் சென்ற பிறகு சில விஷயங்கள் மோசமாக மாறுகிறன. அதில் இருந்து மிஷனை தடுத்தாரா என்பது தான் படத்தின் கதை என கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையான கதை இதுவா என படம் வெளியானால் தான் தெரியவரும்.
இதையும் படிக்க : கூலி படத்தில் வன்முறை காட்சிகள்.. லோகேஷ் கனகராஜ் விளக்கம்!
கூலி படத்தில் ஆமிர்கான், நாகார்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.